கல்வி&வேலைவாய்ப்பு

பேங்க் ஆப் பரோடா வங்கியில் வேலை: டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்

பேங்க் ஆப் பரோடாவில் காலியாக உள்ள 104 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது

நாட்டின் முன்னணி பொதுத்துறை வங்கிகளில் ஒன்றான பேங்க் ஆப் பரோடாவில் காலியாக உள்ள 104 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு எப்படி விண்ணப்பிப்பது என்ற விவரங்கள் வருமாறு:

பணியிடங்கள்: குரூப் ஹெட்: 04, பிராந்திய ஹெட்: 17, சீனியர் ரிலேஷன்ஷிப் மேனேஜர் -70,துணை மேலாளர்: 13 - என மொத்தம் 104 காலியிடங்கள் உள்ளன.

கல்வித்தகுதி: ஏதாவது ஒரு டிகிரி படிப்புடன் வங்கி அல்லது நிதி சார்ந்த நிறுவனங்களில் பணியாற்றியிருக்க வேண்டும். 3 முதல் 10 ஆண்டுகள் வரை அனுபவம் அவசியம்.

வயது வரம்பு: அதிகபட்சமாக 45 வயது வரை விண்ணப்பிக்கலாம்.

தேர்வு முறை: ஆன்லைன் டெஸ்ட், உளவியல் தேர்வு, நேர்முகத்தேர்வு அடிப்படையில் தேர்வர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிப்பது எப்படி? ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி நாள்: 16.04.2026

விண்ணப்ப அறிவிப்பை படிக்க: https://bankofbaroda.bank.in/career/current-opportunities/recruitment-of-professionals-on-contract-basis-for-wealth-management-services-department-16-04