கல்வி&வேலைவாய்ப்பு

பி.எஸ்.என்.எல். நிறுவனத்தில் வேலை: 100 காலியிடங்கள்- யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?

20 வயது முதல் 30 வயதுக்குள் இருப்பவர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.

மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றாக பி.எஸ்.என்.எல் உள்ளது. மத்திய தொலைத்தொடர்புத்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் இந்த நிறுவனத்தில் காலியாக இருக்கக் கூடிய 100 இடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதன் விவரங்க்ளை பார்கக்லாம்.

பதவியின் பெயர்: ஜூனியர் டெலிகாம் ஆபிசர் (டெலிகாம்)

பணியிடங்கள்: கர்நாடகா- 26, மராட்டியம்- 16, கேரளா -15, மத்திய பிரதேசம்- 10, சென்னை- 5, தமிழகம் -1, ஒடிசா 6 உட்பட மொத்தம் 100 இடங்கள் உள்ளன.

கல்வித்தகுதி: பி.இ.,/பி.டெக்.,/ எம்.எஸ்சி.,

வயது வரம்பு: 3.7.2026- தேதியின் படி 20 வயது முதல் 30 வயதுக்குள் இருக்க வேண்டும்.

தேர்ச்சி முறை: ஆன்லைன் தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு.

சம்பளம்: ரூ.16,400- 40,500 வரை

தேர்வு மையம்: சென்னை

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பக்கட்டணம்: ரூ. 2000. எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு ரூ. 1000

விண்ணப்பிக்க கடைசிநாள்: 3.7.2026

தேர்வு பற்றிய கூடுதல் விவரங்களுக்கு : https://bsnlregistration.ibtexamination.com/AppO2BsNL_2026/

SCROLL FOR NEXT