File Image 
கல்வி/வேலைவாய்ப்பு

பி.எஸ்.என்.எல். நிறுவனத்தில் வேலை- என்ஜினீயரிங் படித்தவர்களுக்கு அருமையான வாய்ப்பு

இந்த நிறுவனத்தில் காலியாக உள்ள 120 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

சென்னை,

மத்திய அரசின் பொத்துறை நிறுவனங்களில் ஒன்று பி.எஸ்.என்.எல்.எனப்படும் பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட்டு. நாடு முழுவதும் இணையசேவை மற்றும் டெலிகாம் சேவையை வழங்கி வருகிறது. தொலைத்தொடர்பு சேவையில் தனியார் நிறுவனங்களுக்கு இணையாக முன்னணி வகிக்கும் இந்த நிறுவனத்தில் காலியாக உள்ள 120 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இது பற்றிய விவரங்கள் வருமாறு:

பணி நிறுவனம்: பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் (பி.எஸ்.என்.எல்.)

பணி இடங்கள்: 120

பதவி: சீனியர் எக்சிகியூட்டிவ் டிரெய்னி (டெலிகாம் மற்றும் பைனான்ஸ்)

கல்வி தகுதி: பி.இ., பி.டெக்., சி.ஏ., சி.எம்.ஏ.

வயது: 7-3-2026 அன்றைய தேதிப்படி குறைந்தபட்ச வயது: 21, அதிகபட்ச வயது: 30. அரசு விதிமுறைகளின்படி வயது தளர்வு உண்டு.

தேர்வு முறை: ஆன்லைன் தேர்வு, நேர்காணல்

தேர்வுமையம் (தமிழ்நாடு): சென்னை

விண்ணப்பிக்க கடைசி தேதி: 31-3-2026 (தேதி நீட்டிக்கப்பட்டுள்ளது)

இணையதள முகவரி: https://bsnl.co.in/en