கல்வி&வேலைவாய்ப்பு

கனரா வங்கியில் வேலை: 3,500 காலியிடங்கள்- விண்ணப்பிப்பது எப்படி?

இந்த வங்கியில் அப்ரெண்டீஸ் எனப்படும் பயிற்சி பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இந்தியாவின் முன்னணி பொதுத்துறை வங்கிகளில் ஒன்றாக கனரா வங்கி உள்ளது. பெங்களூரை தலைமையிடமாக கொண்டு இயங்கும் இந்த வங்கிக்கு நாடு முழுவதும் கிளைகள் உள்ளன. இந்த வங்கியில் அப்ரெண்டீஸ் எனப்படும் பயிற்சி பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இது பற்றிய விவரங்கள் வருமாறு:

பணியிடங்கள்: 3,500, தமிழ்நாட்டில் மட்டும் 391 காலியிடங்கள் உள்ளன.

கல்வித்தகுதி: ஏதாவது ஒரு டிகிரி முடித்தால் போதும்

வயது வரம்பு: 20-வயது முதல் 28 வரை- அரசு விதிகளின் படி வயது உச்ச வரம்பில் தளர்வுகள் அளிக்கப்படும்.

சம்பளம்: ரூ.16,650

தேர்வு முறை: மெரிட் லிஸ்ட், சான்றிதழ் சரிபார்ப்பு, தேர்வு எதுவும் கிடையாது

விண்ணப்ப கட்டணம்: ரூ.500, எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளிகளுக்கு கட்டணம் கிடையாது:

விண்ணப்பிக்க கடைசி நாள்:17.10.2026

தேர்வு அறிவிப்பை படிக்க:

https://www.canarabank.bank.in/documents/d/guest/apprenticeship-advertisement-2026-27

SCROLL FOR NEXT