கல்வி&வேலைவாய்ப்பு

சென்ட்ரல் வங்கியில் வேலை... யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?

இந்த வேலைக்கு பி. இ/பிடெக்,எம்பிஏ, சிஏ முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

மத்திய அரசின் பொதுத்துறை வங்கிகளில் ஒன்றான சென்ட்ரல் வங்கியில் காலியாக உள்ள 26 சிறப்பு அதிகாரிகள் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இது பற்றிய விவரங்கள் பின்வருமாறு:

பணியிடங்கள்: சிறப்பு அதிகாரிகள் 26

தேர்வுமுறை: எழுத்து தேர்வு, நேர்முகத்தேர்வு

கல்வித்தகுதி: பி. இ/பிடெக்,எம்பிஏ, சிஏ முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். அனுபவமும் அவசியம்

வயது வரம்பு: பணியிடங்களுக்கு தகுந்தபடி மாறுபடும்: அதிகபட்சமாக 45 வயது வரை விண்ணப்பிக்கலாம்

சம்பளம்: ரூ.1,20,940 வரை

விண்ணப்ப கட்டணம்: ரூ.850

விண்ணப்பிக்க கடைசி நாள்: 30.04.2026

தேர்வு அறிவிப்பினை பார்க்க: https://centralbank.bank.in/