கல்வி&வேலைவாய்ப்பு

இந்தியன் வங்கியில் வேலை - 1,500 பணியிடங்கள்... யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம் தெரியுமா?

இந்த காலியிடங்களுக்கு விண்ணப்பிப்பது எப்படி என்ற விவரங்களை காணலாம்.

2026–27 நிதியாண்டிற்கான 1,500 பயிற்சிப் பணியிடங்களுக்கான (தமிழ்நாட்டில் உள்ள 270 காலிப்பணியிடங்கள் உட்பட) அதிகாரப்பூர்வ ஆட்சேர்ப்பு அறிவிப்பை இந்தியன் வங்கி (Indian Bank) வெளியிட்டுள்ளது. இந்த காலியிடங்களுக்கு விண்ணப்பிப்பது எப்படி? என்ற விவரங்கள் பின்வருமாறு:

பணி நிறுவனம்: இந்தியன் வங்கி

பயிற்சி பணி இடங்கள்: 1,500 (அப்ரண்டீஸ் பயிற்சி பணி). தமிழ்நாட்டில் 270 இடங்கள்.

பயிற்சி காலம்: ஒரு ஆண்டு

கல்வி தகுதி: 1-4-2022-க்கு பிறகு ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு முடித்தவர்கள். 1-11-2026-க்குள் இறுதி தேர்வு மதிப்பெண்கள் வெளியாகி தேர்ச்சி பெற்றவர்களாக இருக்க வேண்டும்.

வயது: 25-11-2026 அன்றைய தேதிப்படி குறைந்தபட்ச வயது 20; அதிகபட்ச வயது 28. அரசு விதிமுறைகளின்படி 3 முதல் 15 ஆண்டுகள் வரை வயது தளர்வு உண்டு. (மாற்றுத்திறனாளிகள் உள்பட)

ஊக்கத்தொகை (மாதம்): மெட்ரோ/நகர்ப்புறம்-ரூ.15,000, புறநகர்/கிராமப்புறம்-ரூ.12,300

தேர்வு முறை: ஆன்லைன் தேர்வு, உள்ளூர் மொழித்தேர்வு

விண்ணப்பிக்க கடைசி தேதி: 25-11-2026

இணையதள முகவரி: https://indianbank.bank.in/en/career

SCROLL FOR NEXT