இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனத்தில் காலியாக உள்ள 500 அப்ரண்டிஸ் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்தப் பணிகளுக்கு 12-ம் வகுப்பு, டிப்ளமோ மற்றும் பட்டப்படிப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
பணியிட விவரங்கள்
இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனத்தின் பைப்லைன்ஸ் பிரிவில் மொத்தம் 500 அப்ரண்டிஸ் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.
- கிழக்கு மண்டலம் - 116
- மேற்கு மண்டலம் - 149
- வடக்கு மண்டலம் - 110
- தெற்கு மண்டலம் - 46
- தென்கிழக்கு மண்டலம் - 79
தமிழகத்தில் 38 இடங்கள்
தமிழகத்தில் மட்டும் 38 பணியிடங்கள் உள்ளன.
கல்வித்தகுதி
- டெக்னீஷியன் அப்ரண்டிஸ் (மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல், தொலைத்தொடர்பு மற்றும் கருவியியல்) பணிகளுக்கு தொடர்புடைய பிரிவில் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.
- உதவியாளர் (மனிதவளம்) பணிக்கு ஏதேனும் ஒரு பிரிவில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
- கணக்காளர் பணிக்கு பி.காம் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
- டேட்டா என்ட்ரி ஆபரேட்டர் பணிக்கு 12-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். பட்டப்படிப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்க முடியாது.
- டொமஸ்டிக் டேட்டா என்ட்ரி ஆபரேட்டர் பணிக்கு 12-ம் வகுப்பு தேர்ச்சியுடன் உரிய திறன் சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு
18 முதல் 24 வயதுக்குள் இருக்க வேண்டும். எஸ்.சி., எஸ்.டி. பிரிவினருக்கு 5 ஆண்டுகளும், ஓ.பி.சி. (என்.சி.எல்.) பிரிவினருக்கு 3 ஆண்டுகளும் வயது வரம்பில் தளர்வு வழங்கப்படும். மாற்றுத்திறனாளிகளுக்கும் அரசு விதிமுறைகளின்படி வயது தளர்வு உண்டு.
தேர்வு செய்யும் முறை
தகுதியானவர்கள் மதிப்பெண் அடிப்படையிலான தரவரிசைப் பட்டியல் மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிப்பது எப்படி?விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி நாள்: டிசம்பர் 5, 2026