கல்வி&வேலைவாய்ப்பு

ஐஆர்சிடிசி நிறுவனத்தில் வேலை: யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?

ஐஆர்சிடிசியில் ஒப்பந்த அடிப்படையில் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இந்திய ரெயில்வே உணவு மற்றும் சுற்றுலா நிறுவனமான ஐஆர்சிடிசியில் ஒப்பந்த அடிப்படையில் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இது பற்றிய விவரங்கள் வருமாறு:

பணியிடங்கள்: 'ஹாஸ்பிடாலிட்டி மானிடர்ஸ் (விருந்தோம்பல் கண்காணிப்பாளர்)' பிரிவில் மொத்தம் 84 இடங்கள் உள்ளன.

கல்வித்தகுதி: பி.எஸ்சி., / பி.பி.ஏ., / எம்.பி.ஏ உள்ளிட்ட படிப்புகள் முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

வயது வரம்பு: 18-வயது முதல் 27 வரை

ஒப்பந்த காலம்: 3 ஆண்டு

ஊதியம்: மாதம் ரூ.30 ஆயிரம்

காலியிடங்கள் உள்ள பகுதி: தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா.

தேர்வு முறை: நேர்முகத்தேர்வு- அசல் சான்றிதழ்களுடன் 'வாக் இன் இன்டர்வியூவில் பங்கேற்க வேண்டும்.

முகவரி: 6A, The Rain Tree Place, No.9, Mc Nichols Road, Chetpet, Chennai - 600 031 : 2026 .

நடைபெறும் தேதி: ஏப்ரல் 25, 27, 28

நேரம்: காலை 10:30 மாலை 5:30 மணி வரை

கூடுதல் விவரங்களுக்கு: irctc.com