புதுடெல்லி,
மத்திய அரசுக்கு சொந்தமான பொதுத்துறை காப்பீட்டு நிறுவனங்களில் ஒன்றான நேஷனல் இன்சூரன்ஸ் நிறுவனத்தில் என்ஐசிஎல் காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு விண்ணபிப்பது யார்? என்ற விவரங்கள் பின்வருமாறு:
பணியிடங்கள்: நிர்வாக அதிகாரி: பொது பிரிவு 200, ரிஸ்க் என்ஜினியர்ஸ் 28, ஆட்டோமொபைல் 20, ஃபைனான்ஸ் 20, சட்டம் 20, ஐ.டி., 10 உட்பட மொத்தம் 321 காலியிடங்கள் உள்ளன.
கல்வித்தகுதி : பணியிடங்களுக்கு தகுந்தபடி மாறுபடும்: பட்டப்படிப்பு / பி.எல்., / பி.இ., / பி.டெக்., / எம்.சி.ஏ. உள்ளிட்ட படிப்புகள் முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
வயது : 21 – 30 வயது வரை விண்ணப்பிக்கலாம்.
தேர்ச்சி முறை : முதன்மை தேர்வு, மெயின் தேர்வு என இரு கட்ட தேர்வுகள் நடைபெறும்.
தேர்வு மையம் : சென்னை, கோவை, மதுரை, திருநெல்வேலி உட்பட 12 இடங்களில் தேர்வு நடைபெறுகிறது
விண்ணப்பிக்கும் முறை : ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பக்கட்டணம் : ரூ. 1000. எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு ரூ. 250 கட்டணம் ஆகும்.
விண்ணப்பிக்க கடைசிநாள் : 28.10.2026
கூடுதல் விவரங்களுக்கு : nationalinsurance.nic.co.in