திருச்சி,
மத்திய அரசின் கல்வி நிறுவனங்களில் ஒன்றான திருச்சி தேசிய தொழில்நுட்பக் கழகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிட்டப்பட்டுள்ளது. இது பற்றிய விவரங்களை பார்க்கலாம்.
பணியிடங்கள்: உதவி பேராசிரியர் 105, இணை பேராசிரியர் 15, பேராசிரியர் 2 என மொத்தம் 122 இடங்கள் உள்ளன.
கல்வித்தகுதி: யுஜிசி விதிகளின் படி பேராசிரியர் பதவிகளுக்கான கல்வி தகுதி பெற்று இருக்க வேண்டும். பி.எச்.டி முடித்து இருப்பது கட்டாயம்
வயது வரம்பு: 35 வயது வரை விண்ணப்பிக்கலாம். அரசு விதிகளின் படி வயது வரம்பில் தளர்வுகள் அளிக்கப்படும்.
தேர்ச்சி முறை: எழுத்துத்தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு, நேர்முகத்தேர்வு
விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்
விண்ணப்பக் கட்டணம்: ரூ. 2500. எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு ரூ. 1250
சம்பளம்: பேராசிரியர் பணிகளுக்கு ரூ.56,100- 1,77,500 வரை வழங்கப்படும்.
விண்ணப்பிக்க கடைசி நாள்: 06.04.2026
தேர்வு அறிவிப்பை படிக்க: https://www.nitt.edu/home/other/jobs/faculty_recruitment_2026/