மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றான நெய்வேலி நிலக்கரி சுரங்க நிறுவனத்தில் காலியாக உள்ள பயிற்சி பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இது பற்றிய விவரங்கள் வருமாறு:
பதவி: ஐ.டி.ஐ பயிற்சியாளர் - 700 இடங்கள், பட்டதாரி பயிற்சியாளர் - 367 இடங்கள்
பயிற்சி காலம்: ஒரு ஆண்டு.
கல்வித் தகுதி:ஐ.டி.ஐ பயிற்சியாளர்: சம்பந்தப்பட்ட பிரிவில் ஐ.டி.ஐ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
பட்டதாரி பயிற்சியாளர்: வணிகவியல், வணிக நிர்வாகம், கணினி அறிவியல், கணினி பயன்பாடு, புவியியல், நுண்ணுயிரியல், வேதியியல், மருந்தியல் அல்லது செவிலியர் பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். (2022 முதல் 2026 வரையிலான ஆண்டுகளில் தேர்ச்சி பெற்றவர்கள் மட்டும் விண்ணப்பிக்கலாம்)
வயது: குறைந்தபட்சம் 18 வயது பூர்த்தியடைந்திருக்க வேண்டும்.
பயிற்சி பணியிடம்: நெய்வேலி மற்றும் சென்னை.
மாதாந்திர ஊக்கத்தொகை: ஐ.டி.ஐ ரூ.12,000, பட்டதாரி: ரு,14,174, மருந்தியல் (அலோபதி/ஆயுர்வேதம்) மற்றும் செவிலியர்-ரூ.16,678.
தேர்வு முறை: மதிப்பெண் அடிப்படையிலான தரவரிசைப் பட்டியல், சான்றிதழ் சரிபார்ப்பு.
விண்ணப்பிக்க கடைசி தேதி: 9.11.2026
கூடுதல் விவரங்களுக்கு :https://www.nlcindia.in