மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான ஓஎன்ஜிசி நிறுவனத்தில் காலியாக உள்ள 3,047 அப்ரண்டிஸ் பயிற்சிப் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு 10-ம் வகுப்பு, 12-ம் வகுப்பு, ஐ.டி.ஐ., டிப்ளமோ மற்றும் பட்டப்படிப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
காலிப்பணியிடங்கள்
மொத்தம் 3,047 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதில் ஃபிட்டர், எலக்ட்ரீசியன், கம்ப்யூட்டர் ஆபரேட்டர், அலுவலக உதவியாளர், மெக்கானிக், வெல்டர் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் பணியிடங்கள் உள்ளன.
கல்வித்தகுதி
- 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள்.
- 12-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள்.
- தொடர்புடைய பிரிவில் ஐ.டி.ஐ. முடித்தவர்கள்.
- டிப்ளமோ முடித்தவர்கள்.
- பி.காம்., பி.எஸ்சி., பி.பி.ஏ. உள்ளிட்ட பட்டப்படிப்புகள் மற்றும் என்ஜினீயரிங் பட்டம் பெற்றவர்கள்.
வயது வரம்பு
விண்ணப்பதாரர்கள் 18 முதல் 24 வயதுக்குள் இருக்க வேண்டும். எஸ்.சி., எஸ்.டி. பிரிவினருக்கு 5 ஆண்டுகளும், ஓ.பி.சி. பிரிவினருக்கு 3 ஆண்டுகளும் வயது வரம்பில் தளர்வு வழங்கப்பட்டுள்ளது.
ஊதியம்
தேர்வு செய்யப்படும் பயிற்சியாளர்களுக்கு கல்வித்தகுதிக்கு ஏற்ப மாதந்தோறும் ரூ.8,200 முதல் ரூ.12,300 வரை உதவித்தொகை வழங்கப்படும்.
தேர்வு செய்யும் முறை
விண்ணப்பதாரர்கள் கல்வித்தகுதி அடிப்படையில் பட்டியலிடப்பட்டு, சான்றிதழ் சரிபார்ப்பு மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை
தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்க வேண்டும். ஐ.டி.ஐ. உள்ளிட்ட தொழிற்பயிற்சி பிரிவினர் என்.ஏ.பிஎஸ் NAPS இணையதளத்திலும், டிப்ளமோ மற்றும் பட்டதாரிகள் என்.ஏ.டிஎஸ் இணையதளத்திலும் விண்ணப்பிக்க வேண்டும்.
முக்கிய தேதிகள்
- விண்ணப்பம் தொடங்கிய நாள்: 29.10.2026
- விண்ணப்பிக்க கடைசி நாள்: 20.11.2026
விண்ணப்ப அறிவிப்பை பார்க்க
https://www.ongcindia.com/documents/77751/2660534/Advertisement-engagement-Apprentices2026-27.pdf/e926a825-c08b-6403-60f1-ea0232bcaab8