சென்னை,
இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியாக எஸ்.பி.ஐ உள்ளது. நாடு முழுவதும் ஆயிரக்கணக்கான கிளைகளுடன் இயங்கி வரும் இந்த வங்கியில் வேலைக்கு சேர வேண்டும் என்பது பல லட்சம் இளைஞர்களின் கனவாக உள்ளது. இதனால், எஸ்பிஐ வெளியிடும் அறிவிப்பை ஆர்வத்துடன் எதிர்பார்த்து இருப்பார்கள். இந்த நிலையில், சிறப்பு அதிகாரி பணியிடங்களை நிரப்ப எஸ்பிஐ அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இது பற்றிய விவரங்கள் வருமாறு:
பணி நிறுவனம்: ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா (எஸ்.பி.ஐ.)
காலி பணி இடங்கள்: 207
பதவி பெயர்: ஸ்பெஷலிஸ்ட் கேடர் அதிகாரி (ரீஜினல் ஹெட், ஜோனல் ஹெட், ரிலேஷன்ஷிப் மேனேஜர், இன்வெஸ்ட்மெண்ட் ஸ்பெஷலிஸ்ட், இன்வெஸ்ட்மெண்ட் ஆபீசர் போன்ற பதவிகள்)
கல்வி தகுதி: இளங்கலை பட்டப்படிப்பு, முதுகலைப்பட்டப்படிப்பு, எம்.பி.ஏ., பணி அனுபவமும் கொண்டிருக்க வேண்டும்.
வயது: பதவியின் தன்மைக்கேற்ப வயது வரம்பு மாறுபடும். அரசு விதிமுறைகளின் படி 5 ஆண்டுகள் முதல் 15 ஆண்டுகள் வரை வயது தளர்வு உண்டு. (மாற்றுத்திறனாளிகள் உள்பட)
தேர்வு முறை: ஷார்ட் லிஸ்டிங், நேர்காணல்
விண்ணப்பிக்க கடைசி தேதி: 5-10-2026
கூடுதல் விவரங்களுக்கு : https://sbi.bank.in/web/careers/current-openings