கல்வி&வேலைவாய்ப்பு

மத்திய அரசின் பெல் நிறுவனத்தில் வேலை: 660 காலியிடங்கள்

தமிழ்நாட்டில் திருச்சி உள்பட நாட்டில் பல்வேறு நகரங்களில் இந்த நிறுவனம் உள்ளது.

மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றாக பெல் நிறுவனம் உள்ளது. தமிழ்நாட்டில் திருச்சி உள்பட நாட்டில் பல்வேறு நகரங்களில் இந்த நிறுவனம் உள்ளது. இதில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலம் என்ற விவரங்கள் பின்வருமாறு:

பணியிடங்கள்:

பிட்டர் 278,

வெல்டர் 104,

மெஷினிஸ்ட் 101,

எலக்ட்ரீசியன் 90,

டர்னர் 52,

எலக்ட்ரானிக் மெக்கானிக் 23 என மொத்தம் மொத்தம் 660 இடங்கள் உள்ளன.

கல்வித்தகுதி : ஐ.டி.ஐ. முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

வயது : 14 – 27 வயது வரை விண்ணப்பிக்கலாம்.

தேர்ச்சி முறை : ஆன்லைன் தேர்வு, திறன் தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு

விண்ணப்பிக்கும் முறை : ஆன்லைன் வழியாக மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.

விண்ணப்பக்கட்டணம் : ரூ. 1072 செலுத்த வேண்டும்; எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு ரூ. 472 ஆகும்.

கூடுதல் விவரங்களுக்கு : careers.bhel.in

SCROLL FOR NEXT