மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றாக ஹிந்துஸ்தான் காப்பர் நிறுவனம் உள்ளது. மத்திய சுரங்க மற்றும் கனிம வள அமைச்சகத்தின் கீழ் செயல்படும் இந்த நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இது பற்றிய விவரங்கள் வருமாறு:
பணியிடங்கள்: மொத்தம் 70 காலியிடங்கள் உள்ளன.
பதவியின் பெயர்: மைனிங் எலக்ட்ரிக்கல் மெக்கானிக்கல் , பைனான்ஸ், சுற்றுச்சூழல் உள்ளிட்ட பிரிவுகள் காலியிடங்கள் உள்ளன.
கல்வித்தகுதி: டிப்ளமோ / பட்டப்படிப்பு / பி.இ., / பி.டெக்., / சி.ஏ.,
வயது வரம்பு: 18 வயது முதல் 47 வயது வரை விண்ணப்பிக்கலாம்
தேர்வு முறை: நேர்முகத்தேர்வு
விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்
விண்ணப்பக்கட்டணம்: ரூ. 500. எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு கட்டணம் இல்லை.
விண்ணப்பிக்க கடைசிநாள்: 25.6.2026
கூடுதல் விவரங்களுக்கு; hindustancopper.com