சென்னை,
சென்னை மாநகர போக்குவரத்து கழகத்தில் அப்ரெண்டீஸ் எனப்படும் பயிற்சி பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு mtcஎன்ஜினீயரிங், டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்க முடியும். ஒப்பந்த அடிப்படையிலான இந்த பணிக்கு மாதம் ரூ.12.300 வழங்கப்படும். டிப்ளமோ முடித்தவர்களுக்கு ரூ.10,900 வழங்கப்படும்.
இது குறித்து சென்னை மாநகர போக்குவரத்து கழகம் வெளியிட்ட அறிக்கையில் கூறியதாவது: மாநகர் போக்குவரத்துக் கழகத்தில், தொழில் பழகுநர் பயிற்சி பெற தகுதியான நபர்கள் (https://nats.education.gov.in) என்ற இணைதளத்தில் ஆகஸ்ட் 28-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். மாநகர் போக்குவரத்துக் கழகத்தில், ஒரு வருடம் தொழில் பழகுநர் பயிற்சி பெற தகுதியான பொறியியல் பட்டம், மற்றும் பட்டயம் (இயந்திரப் பொறியியல் / வாகனப் பொறியியல், சிவில் பொறியியல், மின் மற்றும் மின்னணுப் பொறியியல், கணினித் தொழில்நுட்பம்) (B.A, B.Sc, B.Com, B.B.A, B.C.M) இளங்கலைப் பட்டதாரிகளிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
2022, 2023, 2024, 2025 மற்றும் 2026-ம் ஆண்டுகளில் தேர்ச்சி பெற்ற (http://nats.education.gov.in) இணையதளம் வாயிலாக 28.08.2026-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.