அஞ்சல் துறையில் காலியாக உள்ள 24 கார் டிரைவர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.
தமிழக அஞ்சல் துறையில் ஸ்டாஃப் கார் டிரைவர் பணியிடங்களுக்காக மொத்தம் 24 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர். இந்த பணியிடங்கள் நிரந்தர அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. சென்னை, கோவை, மதுரை, சேலம், திருச்சி ஆகிய இடங்களில் பணியிடங்கள் உள்ளன.
விண்ணப்பதாரர்கள் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும், இலகுரக மற்றும் கனரக வாகனங்களை ஓட்டுவதற்கான செல்லத்தக்க ஓட்டுநர் உரிமம் பெற்றிருக்க வேண்டும். வாகனங்களின் இயக்கம் மற்றும் சிறிய பழுதுகளை சரிசெய்வது குறித்த அடிப்படை அறிவு பெற்றிருக்க வேண்டும். இலகுரக மற்றும் கனரக வாகனங்களை ஓட்டுவதில் குறைந்தது 3 ஆண்டுகள் அனுபவம் அவசியம்.
30.11.2026 அன்றைய தேதியின்படி விண்ணப்பதாரர்கள் 18 முதல் 27 வயதுக்குள் இருக்க வேண்டும்.
எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு 5 ஆண்டுகளும், ஓபிசி பிரிவினருக்கு 3 ஆண்டுகளும் வயது வரம்பில் தளர்வு வழங்கப்பட்டுள்ளது. மாற்றுத்திறனாளிகளுக்கும் அரசு விதிமுறைகளின்படி வயது தளர்வு உண்டு.
தேர்வு செய்யப்படும் பணியாளர்களுக்கு மாதம் ரூ.19,900 முதல் ரூ.63,200 வரை சம்பளம் வழங்கப்படும். இதனுடன் அரசின் அனுமதிக்கப்பட்ட இதர படிகளும் வழங்கப்படும்.
விண்ணப்பதாரர்கள் எழுத்துத்தேர்வு மற்றும் ஓட்டுநர் திறன் தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.
முதற்கட்டமாக பொது அறிவு, அடிப்படை கணிதம், நுண்ணறிவு மற்றும் பகுத்தறிவு, வாகன இயக்கவியல், போக்குவரத்து விதிகள் தொடர்பான தேர்வு நடைபெறும். இதையடுத்து வாகனங்களின் இயக்கம் குறித்த அறிவு மற்றும் ஓட்டுநர் திறனை மதிப்பிடும் செய்முறைத் தேர்வு நடைபெறும்.
விண்ணப்பக் கட்டணமாக ரூ.100 செலுத்த வேண்டும். பெண்கள், எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு விண்ணப்பக் கட்டணம் கிடையாது. அஞ்சலகத்தில் இ-பேமெண்ட் மூலம் கட்டணத்தைச் செலுத்த வேண்டும்.
விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் இந்திய அஞ்சல் துறையின் அதிகாரப்பூர்வ இணையதளமான www.indiapost.gov.in என்ற முகவரியில் விண்ணப்பப் படிவத்தை பதிவிறக்கம் செய்ய வேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்துடன் தேவையான சான்றிதழ்களை இணைத்து,
The Senior Manager, Mail Motor Service, No.37, Greams Road, Chennai – 600006
என்ற முகவரிக்கு ஸ்பீடு போஸ்ட் மூலம் அனுப்ப வேண்டும்.
- விண்ணப்பிக்க தொடங்கிய நாள்: 30.10.2026
- விண்ணப்பிக்க கடைசி நாள்: 30.11.2026 மாலை 5 மணி.