மத்திய மின் அமைச்சகத்தின் கீழ் செயல்படும் மேம்பட்ட கணினி மேம்பாட்டு மையம் (சி-டி.ஏ.சி.) நிறுவனத்தில் காலியிடங்கள் ஒப்பந்த அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. சென்னையிலும் பணியிடம் உள்ளது. இது பற்றிய விவரங்கள் வருமாறு:
பணி இடங்கள்: 67 (ஒப்பந்த அடிப்படை)
பதவி: புராஜெக்ட் அசோசியேட், புராஜெக்ட் என்ஜினீயர், புராஜெக்ட் மானேஜர், புரோகிராம் மானேஜர், புரோகிராம் டெலி வரி மானேஜர், புராஜெக்ட் டெக்னீஷியன், சீனியர் புராஜெக்ட் என்ஜினீயர், புராஜெக்ட் லீடர் உள்பட பல்வேறு பணிகள்
பணி இடம்: சென்னை, டெல்லி, ஐதராபாத், மும்பை, கொச்சி, கோவா, லட்சத்தீவு, போபால், கார்வர், பெங்களூரு, திருவனந்த புரம், போர்ட் பிளேர், விசாகப்பட்டினம், திருவனந்தபுரம், பாட்னா, குஜராத், சில்சார்
கல்வி தகுதி: பி.இ., பி.டெக்., எம்.இ., எம்.டெக்., ஐ.டி.ஐ., டிப்ளமோ உள்ளிட்ட படிப்புகள்
வயது: 20-6-2026 அன்றைய தேதிப்படி புராஜெக்ட் அசோசியேட், புராஜெக்ட் டெக்னீஷியன் பணிக்கு 30 வயதுக்குட்பட்டவர்களாகவும், புராஜெக்ட் என்ஜினீயர் பணிக்கு 45 வயதுக்குட்பட்டவர்களாகவும், சீனியர் புராஜெக்ட் என்ஜினீயர் பணிக்கு 40 வயதுக்குட்பட்டவர்களாகவும் இருக்க வேண்டும்.
புரோகிராம் மானேஜர், புரோகிராம் டெலிவரி மானேஜர் உள்ளிட்ட பதவிக்கு 56 வயது என பணியின் தன்மைக்கேற்ப வயது வரம்பு மாறுபடும். அரசு விதிமுறைகளின்படி 3 முதல் 15 ஆண்டுகள் வரை வயது தளர்வு உண்டு. (மாற்றுத்திறனாளிகள் உள்பட)
தேர்வு முறை: ஷார்ட் லிஸ்ட், எழுத்து தேர்வு, திறன் தேர்வு, நேர்காணல்
விண்ணப்பிக்க கடைசி தேதி: 20-6-2026
கூடுதல் விவரங்களுக்கு: https://careers.cdac.in/