கல்வி&வேலைவாய்ப்பு

வருமான வரித்துறையில் வேலை: 119 காலியிடங்கள்- விண்ணப்பிப்பது எப்படி?

இந்த துறையில் காலியாக உள்ள பணியிடங்கள் அவ்வப்போது அறிவிப்பு வெளியிடப்பட்டு நிரப்பப்படுகின்றன. அந்த வகையில் தற்போது 119 காலியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.

மத்திய அரசின் நிதி அமைச்சகத்தின் கீழ் உள்ள மத்திய நேரடி வரிகள் வாரியத்தின் கீழ் செயல்படும் அமைப்பு வருமான வரித்துறை. தனிநபர்கள், நிறுவனங்கள் மற்றும் பிற அமைப்புகளிடமிருந்து வருமான வரியை வசூலிப்பது, கருப்புப் பணம் மற்றும் பினாமி சொத்துரிமை தொடர்பான பரிவர்த்தனைகளைக் கண்டறிந்து தடுப்பது உள்ளிட்ட பணிகளி வருமான வரித்துறை ஈடுபட்டு வருகிறது. நாடு முழுவதும் வருமான வரித்துறைக்கு அலுவலகங்கள் உள்ளன. இந்த துறையில் காலியாக உள்ள பணியிடங்கள் அவ்வப்போது அறிவிப்பு வெளியிடப்பட்டு நிரப்பப்படுகின்றன. அந்த வகையில் தற்போது 119 காலியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு விண்ணப்பிப்பது எப்படி? கல்வித்தகுதி என்ன? உள்ளிட்ட விவரங்கள் வருமாறு:

பணியிடங்கள்: 119

பணியின் விவரம்: வரி உதவியாளர், ஸ்டெனோகிராபர்

கல்வித் தகுதி: 10 முதல் பட்டப்படிப்பு வரை முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

வயது: 18 வயது முதல் 28 வயதுக்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன் வழியாக மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.

தேர்வு முறை: ஆன்லைன் தேர்வு நடைபெறும்

விண்ணப்பிக்க கடைசி தேதி: 10.11.2026

கூடுதல் விவரங்களுக்கு : incometaxdelhi.gov.in

SCROLL FOR NEXT