இந்திய ரெயில்வேயில் காலியாக உள்ள பணியிடங்களை ஆர்.ஆர்.பி எனப்படும் ரெயில்வே ஆட்சேர்ப்பு வாரியம் நிரப்பி வருகிறது. அந்த வகையில், டிக்கெட் எழுத்தர், இளநிலை எழுத்தர் உள்ளிட்ட பதவிகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இது குறித்த விவரம் வருமாறு:
பணி நிறுவனம்: ரெயில்வே ஆட்சேர்ப்பு வாரியம் (ஆர்.ஆர்.பி)
காலி இடங்கள்: 1,688
பதவி: வணிகம் பயணச்சீட்டு எழுத்தர் (700), கணக்கு எழுத்தர் - தட்டச்சு செய் பவர் (200), இளநிலை எழுத்தர் - தட்டச்சர் (600), ரெயில் எழுத்தர் (188)
கல்வி தகுதி: 12-ம் வகுப்பு
வயது: 1-1-2027 அன்றைய தேதிப்படி 18 முதல் 30 வயது. அரசு விதிமுறைகளின் படி 3 முதல் 5 வயது வரை வயது தளர்வு உண்டு. மாற்றுத்திறனாளிகளுக்கு 10 ஆண்டுகள் முதல் 15 ஆண்டுகள் வரை வயது தளர்வு உண்டு
தேர்வு முறை: கம்ப்யூட்டர் அடிப்படையிலான முதல் நிலை தேர்வு, இரண்டாம் நிலை தேர்வு, ஆவண சரிபார்ப்பு, மருத்துவ பரிசோதனை
விண்ணப்பிக்க கடைசி தேதி: 13-11-2026
கூடுதல் விவரங்களுக்கு : https://www.rrbapply.gov.in/