கல்வி&வேலைவாய்ப்பு

ஐக்கிய அரபு நாடுகளில் பணி: விருப்பம் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்

ஐக்கிய அரபு நாடுகளில் பணிபுரிவதற்காக விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

சென்னை,

ஐக்கிய அரபு நாடுகளில் வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. இது தொடர்பாக அரசின் செய்தி, மக்கள் தொடர்புத்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது;

“ஐக்கிய அரபு நாடுகளில் (துபாய்/அபுதாபி) பணிபுரிய Electrician Assistant, Instrumentation Technician, Electrician, Electrical Fitter, Electrical Supervisor, Electrical Foreman, Operation & Maintenance Engineer and Testing & Commissioning Engineer பணிகளுக்கு ஆண் பணியாளர்கள் தேவைப்படுகிறார்கள். (Substation/Power Plant/ Industries) விருப்பம் உள்ளவர்கள் உடனடியாக விண்ணப்பிக்கலாம். ஐக்கிய அரபு நாடுகளில் (துபாய்/அபுதாபி) பணிபுரிய ITI / Diploma / B.E., / B.Tech., in Electrical and Electronics Engineering (EEE) / Instrumentation Engineer தேர்ச்சி பெற்ற 22 முதல் 40 வயதிற்குட்பட்ட குறைந்தது 6 மாத பணி அனுபவம் கொண்ட Electrical Assistant பணிக்கு மாத ஊதியமாக ரூ.32,000 முதல் ரூ.36,000 வரையும், 3 வருட பணி அனுபவம் கொண்ட Electrician பணிக்கு ரூ.36,000 முதல் ரூ.52,000 வரையும், Electrical Fitter பணிக்கு ரூ.40,000 முதல் ரூ.52,000 வரையும், Instrumentation Technician பணிக்கு ரூ.65,000 முதல் ரூ.1,04,000 வரையும் ஊதியமாக வழங்கப்படும். கூடுதல் நேரம் பணிபுரியும் நபர்களுக்கு அதற்கான கூடுதல் நேரப் பணிக்கான ஊதியமும் (Overtime Allowance) வழங்கப்படும்.

மேலும், 25 முதல் 45 வயதிற்குட்பட்ட 5 வருட பணி அனுபவம் கொண்ட Electrical Foreman பணிக்கு ரூ.65,000 முதல் ரூ.91,000 வரையும், Electrical Supervisor பணிக்கு ரூ.78,000 முதல் ரூ.1,43,000 வரையும், Operation & Maintenance Engineer பணிக்கு ரூ.1,30,000 முதல் ரூ.2,60,000 வரையும், Testing and Commissioning Engineer பணிக்கு ரூ.1,04,000 முதல் ரூ.2,86,000 வரையும் மாத ஊதியமாக வழங்கப்படும்.

விசா மற்றும் இருப்பிடம் ஆகியவை வேலை அளிப்பவரால் வழங்கப்படும். மேற்குறிப்பிட்ட பணிக்கு செல்பவர்கள் விசா கிடைத்த பின்னர் இந்நிறுவனத்திற்கு சேவைக் கட்டணமாக ரூ.35,400/- மட்டும் செலுத்தினால் போதுமானது.

மேலே குறிப்பிட்டுள்ள பணிகளுக்கு செல்ல விருப்பமுள்ள ஆண் பணியாளர்கள் ovemclnm@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு தங்களின் சுயவிவரம் அடங்கிய விண்ணப்படிவம், கல்வி, பணி அனுபவ சான்றிதழ், பாஸ்போர்ட் நகல் மற்றும் புகைப்படம் (Resume, Qualification, Experience Certificate, Passport Copy & Photo ஆகியவற்றை 5.12.2026ஆம் தேதிக்குள் அனுப்பவும்.

கூடுதல் விவரங்களுக்கு அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவன இணையதளம் www.omcmanpower.tn.gov.in மற்றும் தொலைபேசி எண்கள் (044-22502267) & வாட்ஸ்ஆப் எண் (95662 39685) வாயிலாக அறிந்து கொள்ளலாம்.”

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT