image: AI 
கல்வி&வேலைவாய்ப்பு

மேனேஜ்மென்ட் ஆப்டிடியூட் டெஸ்ட்; நுழைவுத்தேர்வுக்கு தயாராவது எப்படி? தெரிந்து கொள்வோம் வாருங்கள்

இந்தியாவில் இந்த தேர்வு, எம்.பி.ஏ. மற்றும் "போஸ்ட் கிராஜுவேட் டிப்ளமோ இன் மேனேஜ்மென்ட்" ஆகிய படிப்புகளில் சேர்வதற்காக தேசிய அளவில் நடத்தப்படுகிறது.

1988 ஆம் ஆண்டு முதல் "ஆல் இந்தியா மேனேஜ்மென்ட் அசோசியேசன்" (ALL INDIA MANAGEMNT ASSOCIATION) என்னும் அமைப்பால் நடத்தப்படுகின்ற நுழைவுத்தேர்வின் பெயர் தான் "மேனேஜ்மென்ட் ஆப்டிடியூட் டெஸ்ட்" (MANAGEMENT APTITUDE TEST) என்பதாகும்.

இந்த தேர்வு இந்தியாவில் எம்.பி.ஏ. மற்றும் "போஸ்ட் கிராஜுவேட் டிப்ளமோ இன் மேனேஜ்மென்ட்" (POST GRADUATE DIPLOMA IN MANAGEMENT) ஆகிய படிப்புகளில் சேர்வதற்காக தேசிய அளவில் நடத்தப்படுகிறது.

இந்த தேர்வு, "கம்ப்யூட்டர் அடிப்படையிலான தேர்வு" (COMPUTER BASED TEST), (CBT) தாள் வழித்தேர்வு (PAPER BASED TEST), (PBT) மற்றும் இணைய வழித்தேர்வு (INTERNET BASED TEST), (IBT) என்னும் முறைகளில் நடத்தப்படுகிறது.

தேர்வு எழுத தகுதிகள்

MAT என அழைக்கப்படும் இந்த தேர்வை பல்கலைக்கழகத்தால் அங்கீகரிக்கப்பட்ட பட்டம் பெற்றவர்கள் எழுதலாம். மேலும் பட்டப்படிப்பில் இறுதி ஆண்டு படிப்பவர்களும் இந்த தேர்வை எழுத தகுதி படைத்தவர்கள் ஆவார்கள்.

பட்டப்படிப்பில் குறைந்தபட்ச மதிப்பெண்கள் அல்லது வயது வரம்புகள் எதுவும் இல்லாமல் எந்த பிரிவினரும் தேர்வு எழுதலாம்.

MAT நுழைவுத்தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் ஓராண்டுக்கு மட்டுமே செல்லுபடி ஆகும் என்பது முக்கியமான தகவலாகும். இந்த தேர்வில் வெற்றி பெற்றவர்கள், இந்தியா முழுவதும் உள்ள 600-க்கும் மேற்பட்ட "பி ஸ்கூல்" (B SCHOOL) எனப்படும் கல்வி நிறுவனங்களில் சேர தகுதி படைத்தவர்கள் ஆவார்கள்.

தேர்வு முறை மற்றும் பாடத்திட்டம்

MAT என்னும் நுழைவுத்தேர்வு, போட்டியாளர்களின் திறன்களை அறிந்து கொள்வதற்காக ஐந்து பிரிவுகளில் நடத்தப்படுகிறது.

1. மொழித்திறன் (LANGUAGE COMPREHENSION)

மொழித்திறன் பகுதியில், ஒரு பத்தியை (PARAGRAPH) ஆங்கிலத்தில் கொடுத்திருப்பார்கள். அதனைப்படித்து புரிந்து கொள்ளும் திறன் எந்த அளவுக்கு போட்டியாளருக்கு இருக்கிறது? என்பதை அறிந்து கொள்வதற்காகவே இந்த பகுதி இடம் பெறுகிறது.

குறிப்பாக, போட்டியாளரின் சொற்களை புரிந்து கொள்ளும் திறன் (VOCABULARY), இலக்கண அறிவு (GRAMMAR) ஆகியவற்றை இந்த பகுதி மூலம் கண்டறிந்து கொள்வார்கள்.

2. கணித திறன் பகுதி (MATHEMATICAL SKILLS)

இந்தப்பகுதி, ஒருவரின் எண் கணித திறன் (QUANTITATIVE APTITUDE), அடிப்படை எண் கணிதம் (ARITHMETIC) மற்றும் அடிப்படை இயற்கணிதம் (BASIC ALGEBRA) ஆகியவற்றின் அடிப்படை அறிவை புரிந்து கொள்வதற்காக நுழைவு தேர்வில் இடம் பெறுகிறது.

3. தரவு பகுப்பாய்வு மற்றும் போதிய தரவை கண்டறிதல் (DATA ANALYSIS AND SUFFICIENCY)

இந்தப்பகுதியில், போட்டியாளர்கள் கொடுக்கப்பட்டுள்ள தரவுகளை (DATA) எவ்வாறு புரிந்து கொள்ளுகிறார்கள்? (DATA INTERPRETATION) என்பதை கண்டறியும் வகையில் கேள்விகள் அமைக்கப்பட்டிருக்கும்.

விளக்க படங்கள் (CHARTS), வரைபடங்கள் (GRAPHS) மற்றும் தரவு அட்டவணைகள் (DATA TABLES) ஆகியவற்றை ஆய்வு செய்து புரிந்து கொள்ளும் தன்மையை அறிந்து கொள்வதற்காகவே இந்த பகுதி இடம் பெறுகிறது.

4. புத்திசாலித்தனம் மற்றும் விமர்சன ரீதியான பகுத்தறிவு (INTELLIGENCE AND CRITICAL REASONING)

இந்தப்பகுதியில், தர்க்க ரீதியான முடிவுகளை (LOGICAL DEDUCTION) போட்டியாளர் எவ்வாறு உறுதி செய்கிறார்? என்பதை கண்டறியும் வகையில் கேள்விகள் இடம் பெறும். மேலும், குடும்ப உறவுமுறை வரைபடங்கள் (FAMILY TREE) மற்றும் குறியீட்டு முறை (CODING -DECODING) ஆகியவை பற்றிய கேள்விகளும் இடம்பெற்றுள்ளன.

5. இந்தியா மற்றும் உலகளாவிய சுற்றுச்சூழல் (INDIA AND GLOBAL ENVIRONMENT)

இந்தியா மற்றும் உலகம் சம்பந்தப்பட்ட பொது அறிவு (GENERAL KNOWLEDGE), நடப்பு நிகழ்வுகள் (CURRENT AFFAIRS) மற்றும் வணிகம் சார்ந்த விழிப்புணர்வு (BUSINESS AWARENESS) ஆகியவற்றில் போட்டியாளரின் நிலை என்ன? என்பதைக் கண்டறிவதற்காகவே இந்த பகுதி நுழைவுத்தேர்வில் சேர்க்கப்பட்டுள்ளது.

இந்த தேர்வில் கேள்விகள் கொள்குறி வகை (MUTIPLE CHOICE QUESTIONS) வினாக்களாக அமைக்கப்பட்டிருக்கும். இந்த கேள்விகளுக்கான விடைகளை இரண்டு மணி நேரத்தில் எழுதி முடிக்க வேண்டியது அவசியமாகும்.

போஸ்ட் கிராஜுவேட் டிப்ளமோ இன் பிஸ்னஸ் மேனேஜ்மென்ட் (POST GRADUATE DIPLOMA IN BUSINESS MANAGEMENT)

AIMA நடத்தும் இந்த படிப்பில் மனித வளம் (HUMAN RESOURCE), சந்தைப்படுத்துதல் (MARKETING), நிதி (FINANCE), செயல்பாடுகள் (OPERATIONS), தகவல் தொழில்நுட்பம் (INFORMATION TECNOLOGY), சர்வதேச வணிகம் (INTERNATIONAL BUSINESS), நிதிசார் ஆராய்ச்சி (FINANCIAL RESEARCH), மதிப்பீட்டு மாதிரியாக்கம் (VALUATION MODELLING), டிஜிட்டல் சந்தைப்படுத்துதல் (DIGITAL MARKETING), வணிக பகுப்பாய்வு ( BUSINESS ANALYSIS), விநியோக சங்கிலி மேலாண்மை (SUPPLY CHAIN MANAGEMENT) மற்றும் பொது கொள்முதல் (PUBLIC PROCUREMENT) ஆகிய சிறப்பு பிரிவுகள் உள்ளன.

அனுபவம் வாய்ந்த தொழில் முறை நிபுணர்கள் புதிதாக பட்டம் பெற்றவர்கள், வணிக மேலாண்மையில் அதிக தகவல்கள் பெற விரும்புபவர்கள்-2 என பலரும் இந்த படிப்பில் விரும்பி சேர்கிறார்கள்.

இந்த படிப்பு நேரலை இணையவழியிலும் (VIRTUAL SESSIONS), நேரடி வகுப்பு முறையிலும் (IN PERSON CLASSES) நடத்தப்படுகிறது. இதன் மூலம், பணியிலிருந்து கொண்டே மேலாண்மை படிப்பை படிக்க விரும்புபவர்கள் இந்த படிப்பில் சேர்ந்து படிக்க அதிக வாய்ப்புகள் உள்ளன.

உண்மையான வணிக உலகின் சவால்களை சந்திக்க இளம் மாணவர்கள் தயார் நிலையில் இருப்பதற்கு இந்த படிப்பு மிகவும் உதவிகரமாக அமைகிறது.

பி.ஜி.டி.எம். படிப்பின் சிறப்பு அம்சங்கள்

பல்லாண்டு காலமாக நடத்தப்பட்டு வரும் எம்.பி.ஏ. படிப்புகளை விட இங்கு நடத்தப்படும் பி.ஜி.டி.எம். படிப்பு சில முக்கிய சிறப்பு அம்சங்களை உள்ளடக்கியதாக அமைகிறது.

தொழில் துறை சார்ந்ததாகவும், நடைமுறை திறன்கள், வழிகாட்டுதல்கள் (MENTORSHIP) மற்றும் கார்ப்பரேட் துறை சார்ந்த அனுபவங்களுக்கு (CORPORATE EXPOSURE) அதிக முக்கியத்துவம் இந்த படிப்பில் கொடுக்கப்படுகிறது.

குறிப்பாக கேஸ் ஸ்டடி பகுப்பாய்வு ( CASE STUDIES), வணிக செயல்முறை விளையாட்டுக்கள் (BUSINESS SIMULATION GAMES) நேரடி தொழிலக கலந்துரையாடல் அமர்வுகள் (LIVE INDUSTRY INTERACTIVE SESSSIONS) ஆகியவை இந்த படிப்பின் சிறப்பு அம்சங்கள் ஆகும்.

இந்த படிப்பு ஆல் இந்தியா கவுன்சில் பார் டெக்னிக்கல் எஜுகேஷன் (ALL INDIA COUNCIL FOR TECHNICAL EDUCATION) (AICTE) அங்கீகாரம் பெற்ற படிப்பாகும். இதனால் எம்.பி.ஏ. படிப்பையும், பி.ஜி.டி.எம். படிப்பையும் சமமானதாகவே வேலை வழங்கும் பல நிறுவனங்கள் கருதுகின்றன.

ஆல் இந்தியா கவுன்சில் பார் டெக்னிக்கல் எஜுகேஷன் (ALL INDIA COUNCIL FOR TECHNICAL EDUCATION) (AICTE) நடத்தும் இன்னும் சில படிப்புகள் பற்றிய விபரம்:

o AIMA- Real Estate Management Programmes Powered by SARE

o PGDM- Post Graduate Diploma in Management

o Advanced Certificate Program in Business Analytics & AI

o Advanced Certificate Programme in Digital Marketing & AI

o Post Graduate Diploma in Management for Executive

o Advanced Certificate Programme in Business Consulting

o PGDM- Real Estate Management

o PGCM - Business Analytics

o PGCM- Digital Marketing & Strategy

o Professional Diploma in Public Procurement

o PGCM in Data Analytics and AI Applications

o Advanced Certificate Course in Digital Transformation & AI Driven Business Innovation

o Post Graduate Certificate in Management (PGCM) – Sports Management

o Advanced Certificate Programme in Fintech

o Sustainability Management

o Certificate Course in Emerging Technologies

o PDP Data Science and Generative AI

o Certificate Program for Data Mining

o Certificate Programme in Big Data for Business Analysts

o Certificate Programme in Web Analytics

o Certificate Programme in Email Marketing

o Certificate Programme in Search Engine Marketing

o Certificate Programme in Search Engine Optimisation

o Certificate Programme in Social Media Marketing

o FIVE DAY PROGRAMME ON CASE TEACHING & CASE DEVELOPMENT

o THREE DAY WORKSHOP ON CASE WRITING

o TWO DAY WORKSHOP ON CASE TEACHING

o Advanced Certificate Programme in AVIATION SERVICE MANAGEMENT

o Advanced Certificate Programme in CYBER LAWS

o Corporate Social Responsibility

o Certificate Course on Leading Digital Business Transformation in The Age of AI

o Certificate Programme in Contractual Dispute Resolution

o Certificate Programme in Public Private Partnership

o PGCM - Public Accounting

o PGCM- Operations System

o PGCM- Marketing

o PGCM - Human Resource Development

o PGCM- Finance

o PGCM- International Business

o PGCM- Entrepreneurship & Family Business

o Certificate in Investment Banking Operation Program

o Certificate Program in BFSI

மேலும் விவரங்களுக்கு தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி;

ALL INDIA MANAGEMENT ASSOCIATION

MANAGEMENT HOUSE

14, INSTITUTIONAL AREA,

LODHI ROAD,

NEW DELHI -110003,

INDIA

TELEPHONE: 011 - 24645100 / 011 - 24617354 / 011 - 43128100

Fax: 011- 24626689

E MAIL : mat@aima.in

WEBSITE : www.aima.in