சென்னை,
பிளஸ்-2 பொதுத்தேர்வுக்கான விடைத்தாள் நகலுக்கு விண்ணப்பித்த மாணவர்கள் கடந்த 5-ந்தேதி முதல் 16-ந்தேதி வரை விடைத்தாள் நகலினை பாட வாரியாக பல்வேறு கட்டங்களாக www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கலாம்.
இந்த இணையதளத்தில் 'Higher secondary Examination' என்ற வாசகத்தை கிளிக் செய்தால், அதில் தோன்றும் Higher secondary March 2026-scan copy download என்ற வாசகத்தை கிளிக் செய்து, அதில் தேர்வர்கள் தங்களது பதிவெண், பிறந்த தேதியை உள்ளீடு செய்து பதிவிறக்கம் செய்யலாம்.
கடந்த 5, 6, 8, 9-ந் தேதிகள் வரை பதிவிறக்கம் செய்யும் பாடங்களுக்கான விவரங்கள் மேற்கண்ட இணையதளத்தில் பத்திரிகை செய்திக்குறிப்பு என்ற வாசகத்தை கிளிக் செய்து தெரிந்து கொள்ளலாம். மேலும் இன்று (புதன்கிழமை) பிற்பகல் முதல் தமிழ் உள்ளிட்ட அனைத்து பகுதி-1 மொழிப்பாடங்கள் விடைத்தாள் நகலினை பதிவிறக்கம் செய்துக்கொள்ளலாம் என அரசு தேர்வுகள் இயக்கத்தின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.