சென்னை,
பிளஸ்-2 பொதுத்தேர்வு கடந்த மார்ச் மாதம் 2-ந்தேதி முதல் 26-ந்தேதி வரை நடைபெற்றது. சுமார் 8 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் இந்த தேர்வை எழுதினார்கள். இந்த தேர்வு முடிவுகள் இன்று காலை வெளியிடப்பட்டன. தேர்வு எழுதியவர்களில் 95.2% மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். அதேபோல மொத்தம் 16,024 சதங்களை (நூற்றுக்கு நூறு மதிப்பெண்) மாணவர்கள் வாங்கியுள்ளனர்.
பாட வாரியாக முழு மதிப்பெண்கள் பெற்ற மாணவர்கள் விவரம்
1. தமிழ் - 83
2. ஆங்கிலம் - 21
3. இயற்பியல் - 105
4. வேதியியல் - 632
5. உயிரியல் - 784
6. கணிதம் - 732
7. தாவரவியல் - 31
8. விலங்கியல் - 18
9. கணினி அறிவியல் - 6,945
10. வணிகவியல் - 683
11. கணக்குப் பதிவியல் - 1,946
12. பொருளியல் - 440
13. வரலாறு - 282
14. கணினிப் பயன்பாடுகள் - 2,099
15. வணிகக் கணிதம் மற்றும் புள்ளியியல் - 463
* ஏதேனும் ஒரு பாடத்தில் 100 மதிப்பெண்கள் பெற்ற மாணாக்கர்களின் எண்ணிக்கை - 16,024
* ஏதேனும் ஒரு பாடத்தில் 100 மதிப்பெண்கள் பெற்ற அரசுப் பள்ளிமாணாக்கர்களின் எண்ணிக்கை - 1,865.