சென்னை,
தமிழகத்தில் 55 அரசு மற் றும் 400க்கும் அதிகமான தனியார் பாலிடெக்னிக் கல்லுாரிகள் இயங்கி வருகின்றன. அரசு பாலி 22,600 டிப்ளமா இடங்கள்; டெக்னிக் கல்லுாரிகளில், தனியார் கல்லுாரிகளில், 1.30 லட்சம் டிப்ளமா இடங்கள் உள்ளன.
தற்போது, நடப்பு கல்வியாண்டுக்கான டிப்ளமா படிப்பு மாணவர் சேர்க்கை நடந்து வருகிறது. பாலிடெக்னிக் கல்லுாரிகளில், நேரடி மாணவர் சேர்க்கை நடத்துவதற்கான அவகாசம், ஜூலை, 31ம் தேதியு டன் நிறைவடைந்தது.
அரசு கல்லுாரிகளில் மொத்தமுள்ள, 22,600 இடங்களில், 10,600 இடங்களும், தனியார் கல்லுாரி களில், 1.30 லட்சம் இடங்களில், 22,000 இடங்களும் நிரம்பியுள்ளன. அதனால், மாணவர் சேர்க்கையை அதிகரித்திடும் நோக்கத்தில், டிப்ளமா சேர்க்கைக்கான அவகாசம், வரும், 31ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.