கல்வி&வேலைவாய்ப்பு

போட்டித்தேர்வுக்கு தயாராகுங்கள்... கேள்விகளின் வகைகளும், விவரங்களும்

குழுக்கேள்விகள், சொற்றொடர்களின் உண்மைநிலை கேள்விகள் மற்றும் பகுத்தறிவு திறன் கேள்விகள் ஆகியவை பற்றிய விரிவான விளக்கங்களை அடுத்து காண்போம்.

(Written Examination) கேள்விகளை “கொள்குறி வகைக்கேள்விகள்" (Objective Type Questions), “விரிவான விளக்க வகை கேள்விகள்" (Descriptive Type Questions) என இரண்டு பிரிவுகளாக பிரிக்கலாம்.

கொள்குறி வகைக்கேள்விகளை பொதுவாக 5 வகைகளாக பிரிக்கலாம்.

அவை

1. எளிய நேரடிக்கேள்விகள் (Simple Straight Questions)

2. தொகுப்புக்கேள்விகள் (Compiled Questions)

3. குழுக்கேள்விகள் (Group Questions)

4. சொற்றொடர்களின் உண்மைநிலை கேள்விகள் (The Truth of Statement Questions)

5. பகுத்தறிவு திறன் கேள்விகள் (Reasoning Type Questions)

ஆகியவை ஆகும்.

எளிய நேரடிக்கேள்விகள் (Simple Straight Questions)

எளிமையாகவும், நேரடியாகப்பதிலை அடையாளம் கண்டுகொள்ளும் வகையிலும் அமைக்கப்பட்ட கேள்விகளை "எளிய நேரடிக்கேள்விகள்” (Simple Straight Questions) என அழைப்பார்கள். பொதுவாக இந்த வகைக்கேள்விகளுக்கு போட்டியாளர்களால் மிக எளிதான முறையில் பதில் எழுதிவிட முடியும்.

எளிய நேரடிக்கேள்விகள் மிகவும் எளிமையாக இருப்பதால் தேர்வுக்கு மிக அதிகமான தயாரிப்பை மேற்கொண்டவர்கள், நாம் எவ்வளவு நேரம் விழித்திருந்து படித்தோம். இவ்வளவு எளிமையாக கேள்விகளை கேட்டு விட்டார்களே என்று எண்ணுவதற்கும் வாய்ப்புகள் உண்டு. ஆனால், அதேவேளையில், கடைசி நேர தேர்வு தயாரிப்பில் ஈடுபட்டவர்களுக்கு இந்த எளிய நேரடிக்கேள்விகள் மிகவும் உதவும் வகையில் அமையும்.

எளிய நேரடிக்கேள்விகள் அமையும் விதத்தைப்பார்ப்போம்.

கேள்விகள்:

1. இந்தியாவில் எந்த ஆண்டு மதிப்புக்கூட்டு வரி (VAT) அறிமுகப்படுத்தப்பட்டது?

(a) 1 ஏப்ரல் 2001

(b) 1 ஏப்ரல் 2003

(c) 1 ஏப்ரல் 2005

(d) 1 ஏப்ரல் 2007

2. மின்சாரத்தை எளிதில் கடத்தாத உலோகம் எது?

(a) பிஸ்மத்

(b) செம்பு

(c) வெள்ளி

(d) இரும்பு

3. ரப்பரை வலிமைப்படுத்துவதற்கு பயன்படும் பொருள் என்ன?

(a) குளோரின்

(b) ஸ்பான்ஞ்

(C) சல்பர்

(d) இரும்பு

4. மகா அலெக்சாண்டர் எந்த நாட்டைச்சேர்ந்தவர்?

(a) ரோம்

(b) பிரிட்டன்

(c) ரஷ்யா

(d) கிரேக்கம்

5. விண்வெளிக்கு பயணம் செய்த முதல் இந்திய பெண்மணி

(a) சுனிதா வில்லியம்ஸ்

(b) கல்பனா சாவ்லா

(c) கல்பனா ராய்

(d) கல்பனா தேவி

விடைகள்

1. (c), 2. (a), 3. (c), 4. (d), 5. (b)

தொகுப்பு கேள்விகள் (Compiled Questions)

தொகுப்பு கேள்விகள், பொதுவாக இரண்டு பிரிவுகளை கொண்டதாக அமையும். அதாவது பகுதி-அ (Part - A) மற்றும் பகுதி-ஆ (Part - B) ஆகிய இரண்டு பகுதிகளிலும் கொடுக்கப்பட்டுள்ளவைகளை பார்த்து, அவற்றில் பொருத்தமான இணையை கண்டுபிடித்து, சரியாக விடையளிக்கும் முறையை உள்ளடக்கிய கேள்விகளை "தொகுப்புக்கேள்விகள்" (Compiled Questions) என அழைப்பார்கள்.

எளிய நேரடிக்கேள்விகளைப்போல இந்தக்கேள்விக்கு விடையளிப்பது எளிதான செயல் அல்ல. ஏனென்றால் சரியான பதிலை அடையாளம் காணும்போது சில வேளைகளில் குழப்பமும் உருவாகலாம். எனவே, இந்த வகைக்கேள்விகளுக்கு பதில் எழுதும்போது சிலர் பதற்றமடையவும் வாய்ப்புகள் உள்ளன.

பகுதி-அ மற்றும் பகுதி-ஆ இரண்டு பிரிவுகளுக்கும் உள்ள தொடர்பினை சரியான முறையில் இனம் கண்டவர்களுக்கு இவ்வகைக்கேள்விகள் எளிதாக அமையும். இந்த வகைக்கேள்விகளுக்கு பதில் அளிக்கும்போது சற்று அதிகமான நேரம் தேவைப்படுகிறது. இருந்தபோதும் பொது அறிவு பாடத்தைப்பற்றிய ஆழ்ந்த அறிவு உள்ளவர்களுக்கு இவ்வகைக்கேள்விகளுக்கு பதில் அளிப்பது எளிமையான ஒன்றாக அமைகிறது.

கேள்விகள்:

1. பட்டியல் I உடன் பட்டியல் II ஐ சரியாகப்பொருத்தி, கீழ்க்கண்ட குறியீடுகளின் அடிப்படையில் உங்களது சரியான விடையை தேர்ந்தெடுக்க.

பட்டியல் I பட்டியல் II

A. காந்திஜி 1. எனது இந்திய போராட்டம்

B. நேரு 2. கீதை இரகசியம்

C. சுபாஸ்

சந்திர போஸ் 3. உலக வரலாற்றுக் காட்சிகள்

D. திலகர் 4. இந்து சுயராஜ்யம்

குறியீடுகள்:

A B C D

(a) 1 3 4 2

(b) 2 4 3 1

(c) 3 2 1 4

(d) 4 1 2 3

2. பட்டியல் I உடன் பட்டியல் II ஐ சரியாகப்பொருத்தி, கீழ்க்கண்ட குறியீடுகளின் அடிப்படையில் உங்களது சரியான விடையை தேர்ந்தெடுக்க.

பட்டியல் I பட்டியல் II

A. மைட்டோகாண்ட்ரியா 1. ஒளிச்சேர்க்கை

B. குளோரோபிளாஸ்ட் 2. நீராவிப்போக்கு

C. ஸ்டோமேடா 3. சுவாசித்தல்

D. செல் சுவர் 4. ஆஸ்மாஸிஸ்

குறியீடுகள்:

A B C D

(a) 1 3 4 2

(b) 3 1 4 2

(c) 1 3 2 4

(d) 3 1 2 4

3. பட்டியல் I உடன் பட்டியல் II ஐ சரியாகப்பொருத்தி, கீழ்க்கண்ட குறியீடுகளின் அடிப்படையில் உங்களது சரியான விடையை தேர்ந்தெடுக்க.

பட்டியல் I பட்டியல் II

A. சித்தரஞ்சன் 1. உரத்தொழிற்சாலை

B. தாராபூர் 2. ரெயில் என்ஜின் தொழிற்சாலை

C. சிந்திரி 3. தீப்பெட்டி தொழிற்சாலை

D. சிவகாசி 4. அணுமின் நிலையம்

குறியீடுகள்:

A B C D

(a) 2 4 1 3

(b) 4 1 3 2

(c) 2 1 4 3

(d) 1 3 2 4

4. பட்டியல் | உடன் பட்டியல் II ஐ சரியாகப் பொருத்தி, கீழ்க்கண்ட குறியீடுகளின் அடிப்படையில் உங்களது சரியான விடையை தேர்ந்தெடுக்க.

பட்டியல் I பட்டியல் ||

A. மின்னழுத்தம் 1. வாட்

B. மின் தடை 2. ஆம்பியர்

C. மின்னோட்டம் 3. ஓம்

D. மின் திறன் 4. வோல்ட்

குறியீடுகள்:

A B C D

(a) 4 3 2 1

(b) 1 3 4 2

(c) 2 1 3 4

(d) 1 2 3 4

5. பொருத்துக.

A. செரிகல்ச்சர் 1. நீர்வாழ் உயிரின வளர்ப்பு

B. ஹார்டிகல்ச்சர் 2. தேனீ வளர்ப்பு

C. அக்வாகல்ச்சர் 3. பட்டுப்புழு வளர்ப்பு

D. ஏபிகல்ச்சர் 4. தோட்டக்கலை

குறியீடுகள்:

A B C D

(a) 3 4 1 2

(b) 2 3 4 1

(c) 1 2 3 4

(d) 4 3 2 1

6. சரியானதைப்பொருத்துக:

A. நான்காவது அட்டவணை 1. அதிகார பகுப்பு

B. ஏழாவது அட்டவணை 2. மாநிலங்களவைக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட இடங்கள்

C. பதினோராவது அட்டவணை 3. மொழிகள்

D. எட்டாவது அட்டவணை 4. 73-வது சட்டத்திருத்தம்

குறியீடுகள்:

A B C D

(a) 1 2 3 4

(b) 2 1 4 3

(c) 2 1 3 4

(d) 1 2 4 3

7. பொருத்துக.

பட்டியல் I பட்டியல் II

A. உணவு வேளாண் அமைப்பு 1. பாரீஸ்

B. ஐ.நா. கல்வி, அறிவியல்,

பண்பாட்டு அமைப்பு 2. ஜெனிவா

C. உலக மக்கள் நலவாழ்வு அமைப்பு 3. நியூயார்க்

D. பன்னாட்டு குழந்தைகள்

அவசர நல நிதி 4. ரோம்

குறியீடுகள்:

A B C D

(a) 4 1 2 3

(b) 1 4 3 2

(c) 3 4 1 2

(d) 1 2 4 3

விடைகள்

1. (a) 2. (d) 3. (a) 4. (a) 5. (a) 6. (b) 7. (a)

எழுத்துத்தேர்வில் இடம்பெறும் இன்னும் சில வகைக்கேள்விகளான குழுக்கேள்விகள் (Group Questions), சொற்றொடர்களின் உண்மைநிலை கேள்விகள் (The Truth of Statement Questions) மற்றும் பகுத்தறிவு திறன் கேள்விகள் (Reasoning Types Questions) ஆகிய கேள்விகள் பற்றிய விரிவான விளக்கத்தை அடுத்து காண்போம்.

SCROLL FOR NEXT