கல்வி&வேலைவாய்ப்பு

அறிவியல் ஆராய்ச்சி படிப்புக்கான நுழைவுத்தேர்வுக்கு தயாராகுங்கள் - விரிவான விவரங்கள் வெளியீடு

5 ஆண்டு ஒருங்கிணைந்த எம்.எஸ்.சி. (5-Year Integrated M.Sc.) படிப்பில் சேருவதற்காக இந்த தேர்வு நடத்தப்படுகிறது. 

தேசிய அளவில் ஆராய்ச்சி படிப்புகளை மேற்கொள்வதற்காக நடத்தப்படுகின்ற நுழைவு தேர்வு, “நெஸ்ட்” (NEST) எனப்படும் "நேஷனல் என்ட்ரன்ஸ் ஸ்கிரீனிங் டெஸ்ட்" (NATIONAL ENTRANCE SCREENING TEST) ஆகும். இந்த தேர்வு, 5 ஆண்டு ஒருங்கிணைந்த எம்.எஸ்.சி. (5-Year Integrated M.Sc.) படிப்பில் சேருவதற்காக நடத்தப்படுகிறது. 

புவனேஸ்வர் என்னும் இடத்தில் உள்ள "நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் சயின்ஸ் எஜுகேஷன் அண்ட் ரிசர்ச்" (NATIONAL INSTITUTE OF SCIENCE EDUCATION AND RESEARCH) (NISER) மற்றும் மும்பையில் உள்ள மும்பை பல்கலைக்கழகத்தின் ( UNIVERSITY OF MUMBAI)  அணுசக்தி துறையும் (DEPARTMENT OF ATOMIC ENERGY) இணைந்து நடத்துகிறது.

இந்திய அளவில் அமைக்கப்பட்டுள்ள அறிவியல் மற்றும் ஆராய்ச்சி நிறுவனமாக இந்த நிறுவனம் கருதப்படுகிறது.  குறிப்பாக, அடிப்படையான அறிவியல் அறிவை மேம்படுத்தவும், பாதுகாக்கவும், உலகம் முழுவதும் அறிவியல் அறிவை பரப்பவும் இந்த நிறுவனம் உதவிகரமாக அமைகிறது.

மேலும், வளர்ந்து வரும் இளைஞர்கள் மனதில் அறிவியல் மனப்பான்மையை உருவாக்குவதற்காக பல்வேறு முயற்சிகளை இந்த நிறுவனம் மேற்கொண்டு வருகிறது.  புவனேஸ்வர் என்னும் நகரத்திலிருந்து சுமார் 25 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ஜட்னி (JATNI) என்னும் நகரில் சுமார் 300 ஏக்கர் பரப்பளவில் இந்த நிறுவனம் அமைந்துள்ளது.

மேலும், இந்த நிறுவனம் அணுசக்தி துறையால் நிறுவப்பட்டுள்ள, நிகர் நிலை பல்கலைக்கழக அந்தஸ்து (DEEMED RESEARCH UNIVERSITY) பெற்ற ஹோமி பாபா தேசிய நிறுவனத்தின் (HOMI BHABHA NATIONAL INSTITUTE) வளாகத்திற்கு வெளியே அமைந்த மையமாக செயல்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

நடத்தப்படும் படிப்புகள்

இந்த கல்வி நிறுவனத்தில்,

1. 5 ஆண்டு ஒருங்கிணைந்த எம்.எஸ்.சி. (5-Year Integrated M.Sc.)

2. முதுகலை அறிவியல் (M.Sc.) மருத்துவ மற்றும் கதிரியக்க இயற்பியல் (M.Sc. Programme in Medical & Radiological Physics)

3. ஒருங்கிணைந்த முதுகலை மற்றும் பிஎச்.டி. (Ph.D பட்டப்படிப்பு (Integrated M.Sc.+PhD Programme))

4. பிஎச்.டி. (Ph.D) ஆகிய படிப்புகள் நடத்தப்படுகின்றன.

இங்கு படிக்கும் மாணவர்களின் கல்வித்தரத்தை மேம்படுத்துவதற்காக 8 துறைகள் இயங்குகின்றன. அவை

• உயிரியல் அறிவியல் பள்ளி (School of Biological Sciences)

• வேதியியல் அறிவியல் பள்ளி (School of Chemical Sciences)

• கணினி அறிவியல் பள்ளி (School of Computer Sciences)

• புவி மற்றும் கோள் அறிவியல் பள்ளி (School of Earth and Planetary Sciences)

• மானுடவியல் மற்றும் சமூக அறிவியல் பள்ளி (School of Humanities and Social Sciences)

• கணித அறிவியல் பள்ளி (School of Mathematical Sciences)

• இயற்பியல் அறிவியல் பள்ளி (School of Physical Sciences)

• மருத்துவ மற்றும் கதிர்வீச்சு இயற்பியல் (Medical and Radiation Physics)

தேர்வு எழுத தகுதி (ELIGIBILITY)

பிளஸ்-2 தேர்வில் வெற்றி பெற்றவர்கள் இந்த தேர்வு எழுத அனுமதிக்கப்படுவார்கள். இருப்பினும், சராசரியாக பிளஸ்-2 தேர்வில் 60 சதவீத மதிப்பெண்கள் பெற்றவர்கள் இந்த தேர்வை எழுதலாம். ஆனால், தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடி இனத்தவர்கள் பிளஸ்-2 தேர்வில் 55 சதவீத மதிப்பெண்கள் பெற்றால் போதும்.

உயிரியல் (BIOLOGY), வேதியியல் (CHEMISTRY), கணிதம் (MATHEMATICS), இயற்பியல் (PHYSICS) ஆகிய 4 பாடங்களில் குறைந்தபட்சம் 3 பாடங்களை பிளஸ்-1 மற்றும் மற்றும் பிளஸ்-2 வகுப்புகளில் படித்திருக்க வேண்டியது அவசியம் ஆகும்.

வயது உச்சவரம்பு எதுவும் இல்லை. எந்த வயதிலும் இந்த தேர்வு எழுதி, வெற்றி பெற்று தேவையான படிப்புகளில் சேர்ந்து கொள்ளலாம்.

தேர்வு கட்டணம் (Fees)

தேர்வு எழுத விண்ணப்பம் செய்பவர்கள் விண்ணப்ப கட்டணமாக 1,400 ரூபாய் செலுத்த வேண்டும். இருப்பினும், மகளிர், தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடி இனத்தவர்கள், பொருளாதாரத்தில் நலிந்த பிரிவினர் ஆகியோருக்கு விண்ணப்ப கட்டணமாக ரூபாய் 700 நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

தேர்வு அமைப்பு (EXAM PATTERN)

இந்த நுழைவுத்தேர்வு ஆன்லைன் மூலம் கம்ப்யூட்டர் அடிப்படையில் நடத்தப்படும் தேர்வாகும். மொத்தம் மூன்று மணி நேரம் இந்த தேர்வு நடைபெறும். ஆனால், மாற்றுத்திறனாளிகளுக்கு கூடுதல் நேரமும் ஒதுக்கப்படும்.

மொத்தம் 80 கொள்குறி வகை வினாக்கள் (MULITIPLE CHOICE QUESTIONS) (MCQ) கேட்கப்படும்.  இயற்பியல், வேதியியல், கணிதம் மற்றும் உயிரியல் ஆகிய பாடங்களில் இருந்து ஒவ்வொரு பிரிவிலும் சுமார் 20 கேள்விகள் இடம் பெறும். மொத்தம் 240 மதிப்பெண்களுக்கு தேர்வு நடத்தப்படும். கேள்விகள் ஆங்கிலத்தில் மட்டுமே இடம்பெறும்.

நுழைவுத்தேர்வுக்கான பாடத்திட்டங்கள் (SYLLABUS)

BIOLOGY Classes XI - XII

CLASS XI - THEORY

Unit Title

I Diversity of Living Organisms

II Structural Organization in Plants and Animals

III Cell: Structure and Function

IV Plant Physiology

V Human Physiology

CLASS XII - THEORY

Unit Title

VI Reproduction

VII Genetics and Evolution

VIII Biology and Human Welfare

IX Biotechnology and its Applications

X Ecology and Environment

CHEMISTRY Classes XI - XII

CLASS XI - THEORY

Unit Title

1 Some Basic Concepts of Chemistry

2 Structure of Atom

3 Classification of Elements and Periodicity in Properties

4 Chemical Bonding and Molecular Structure

5 Chemical Thermodynamics

6 Equilibrium

7 Redox Reactions

8 Organic Chemistry: Some basic Principles and Techniques

9 Hydrocarbons

CLASS XII - THEORY

Unit Title

1 Solutions

2 Electrochemistry

3 Chemical Kinetics

4 d -and f -Block Elements 12 | Page

5 Coordination Compounds

6 Haloalkanes and Haloarenes

7 Alcohols, Phenols and Ethers

8 Aldehydes, Ketones and Carboxylic Acids

9 Amines

10 Biomolecules

MATHEMATICS Classes XI - XII

CLASS XI - THEORY

Unit Title

I. Sets and Functions

II. Algebra

III. Coordinate Geometry

IV. Calculus

V. Statistics and Probability

CLASS XII - THEORY

Unit Title

I. Relations and Functions

II. Algebra

III. Calculus

IV. Vectors and Three - Dimensional Geometry

V. Linear Programming

VI. Probability

PHYSICS Classes XI - XII

CLASS XI – THEORY

Unit Title

1: Units and Measurements

2: Motion in a Straight Line

3: Motion in a Plane

4: Laws of Motion

5: Work, Energy and Power

6: Rigid System of Particles and Rotational Motion

7: Gravitation

8: Mechanical Properties of Solids

9: Mechanical Properties of Fluids

10: Thermal Properties of Matter

11: Thermodynamics

12: Kinetic Theory of gases

13: Oscillations

14: Waves

CLASS XII – THEORY

Unit Title

1: Electric Charges and Fields

2: Electrostatic Potential and Capacitance

3: Current Electricity

4: Moving Charges and Magnetism

5: Magnetism and Matter

6: Electromagnetic Induction

7: Alternating Current

8: Electromagnetic Waves

9: Ray Optics

10: Wave Optics

11: Dual Nature of Radiation and Matter

12: Atoms

13: Nuclei

14: Semiconductor Electronics: Materials, Devices and Simple Circuits

மேலும் விவரங்களுக்கு

மேலும் விவரங்களுக்கு தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி

THE Chief Coordinator,

National Institute of Science Education and Research,

Bhubaneswar,

Jatni,

Khurda,

Odisha,

India

PIN: 752050

e-mail : nest-exam@niser.ac.in

website : www.nestexam.in