கல்வி/வேலைவாய்ப்பு

பொதுத்துறை வங்கியில் வேலை: யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?

சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியாவில் 275 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

சென்னை,

மத்திய அரசின் பொதுத்துறை வங்கிகளில் ஒன்றான சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியாவில் 275 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த பணியிடங்களுக்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்? என்பது பற்றிய விவரங்கள் பின்வருமாறு: -

பணியிடங்கள் விவரம்: சிறப்பு அதிகாரி பிரிவில் ஐ.டி, ஆபிசர் 82, சைபர் செக்யூரிட்டி 38, டிஜிட்டல் சப்போர்ட் 26, டிஜிட்டல் அப்ளிகேசன் 25, டேட்டா இன்ஜினியர் 15, டேட்டாபேஸ் அட்மின் 11, சாப்ட்வேர் டெவலப்பர் 6 உட்பட மொத்தம் 275 இடங்கள் உள்ளன.

கல்வித்தகுதி: பணியிடங்களுக்கு தகுந்தபடி கல்வித்தகுதி மாறுபாடும். பி. இ, பி.டெக். எம்.சிஏ முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

சம்பளம் எவ்வளவு: அதிகபட்சமாக ரூ.1,02,300 - 1,20,940.

வயது வரம்பு: 31.1.2026 தேதிப்படி 30 வயது முதல் 45 வயதுக்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம்.

தேர்ச்சி முறை: ஆன்லைன் தேர்வு, நேர்முகத்தேர்வு

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பக்கட்டணம்: பொதுப்பிரிவினருக்கு ரூ. 850 கட்டணம் செலுத்த வேண்டும்; பெண்கள் / எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு ரூ. 150 கட்டணம் ஆகும்.

விண்ணப்பிக்க கடைசிநாள்: 23.3.2026

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி: centralbank.bank.in