கல்வி&வேலைவாய்ப்பு

உதவி பேராசிரியர்கள் பணியிடங்களுக்கான தேர்வு இறுதி விடைக்குறிப்பு வெளியீடு

இறுதி விடைக்குறிப்பு தயாரிக்கப்பட்டு, 25-ந்தேதி (நேற்று) ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

ஆசிரியர் தேர்வு வாரியத்தின் தலைவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-

தமிழ்நாடு கல்லூரிக் கல்வியியல் பணிகளின் கீழ், அரசுக் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் மற்றும் அரசுக் கல்வியியல் கல்லூரிகளுக்கான உதவிப் பேராசிரியர் நேரடி நியமனத்துக்காக எழுத்துத்தேர்வு 27.12.2025 அன்று ஆசிரியர் தேர்வு வாரியத்தால் நடத்தப்பட்டது. இத்தேர்விற்கு விண்ணப்பித்த 47 ஆயிரத்து 47 பேரில் 42 ஆயிரத்து 64 பேர் எழுதினார்கள்.

இந்த தேர்வுக்கான உத்தேச விடைக்குறிப்பு 5.1.2026 அன்று வாரியத்தின் இணையதளத்தில் வெளியிடப்பட்டது. விண்ணப்பதாரர்களிடமிருந்து 5.1.2026 முதல் 13.1.2026 வரை ஆட்சேபனை மனுக்கள் பெறப்பட்டன. இந்த நிலையில், இறுதி விடைக்குறிப்பு தயாரிக்கப்பட்டு, 25-ந்தேதி (நேற்று) ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. பாட வல்லுனர்களால் வழங்கப்பட்டுள்ள விடைக்குறிப்பே இறுதியானது ஆகும். இது சார்ந்த எந்த ஆட்சேபனை கோரிக்கை மனுக்களும் இவ்வாரியத்தால் ஏற்கப்படமாட்டாது எனத் தெரிவிக்கப்படுகிறது. அசல் ஆவணங்கள் சரிபார்ப்பிற்கான இடம் மற்றும் தேதி குறித்த விவரங்கள் பின்னர் அறிவிக்கப்படும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.