நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான எஸ்பிஐ வங்கியில் உள்ள வட்டார அதிகாரி பதவியில் உள்ள 2,050 காலிப்பணியிடங்களை நிரப்ப ஆட்சேர்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதில் தமிழ்நாட்டில் மட்டும் 165 காலிப்பணியிடங்கள் உள்ளன. இதற்கு எப்படி விண்ணப்பிப்பது கல்வித்தகுதி என்ன? என்பது பற்றிய விவரங்கள் பின்வருமாறு:
பணி நிறுவனம்: ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா
பதவியின் பெயர்: வட்டார அதிகாரி (Circle Based Officer)
காலிப்பணியிடங்கள்: 2,050 -சென்னை வட்டாரத்தில் மொத்தம் 165 காலிப்பணியிடங்கள் உள்ளன.
கல்வித்தகுதி: பட்டப்படிப்பு + வங்கிகளில் 2 ஆண்டுகள் பணியாற்றிய அனுபவம்.
வயது வரம்பு: 2025 டிசம்பர் 31-ம் தேதியின்படி, விண்ணப்பதார்கள் 21 வயதிற்கு கீழ் இருக்கக்கூடாது. 30 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: 4 கட்ட தேர்வு முறை உள்ளன. ஆன்லைன் தேர்வு, தெரிவு செய்தல், நேர்காணல் மற்றும் உள்ளூர் மொழி தேர்வு ஆகியவற்றில் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள்
சம்பளம்: இப்பணியிடங்களுக்கு அடிப்படை சம்பளம் ரூ.48,480 ஆகும். அதிகப்படியாக ரூ.48,480 - 85,920 என்ற விதம் சம்பள அளவு நிர்ணயிக்கப்படும்.
விண்ணப்பிக்க கடைசி நாள்: 18.02.2026
இணையதளம்: https://sbi.bank.in/