சென்னை,
தமிழ்நாடு அரசு எம்.ஜி.ஆர். திரைப்படம் மற்றும் தொலைக்காட்சிப் பயிற்சி நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-
செய்தி மக்கள் தொடர்புத் துறையின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் தமிழ்நாடு அரசு எம்.ஜி.ஆர். திரைப்படம் மற்றும் தொலைக்காட்சிப் பயிற்சி நிறுவனம் (தமிழ்நாடு டாக்டர் ஜெ.ஜெயலலிதா இசை மற்றும் கவின் கலைப் பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்டது) , சென்னை 600 113ல் 2026-2027-ஆம் கல்வி ஆண்டில் இளங்கலை காட்சி கலைப் பட்டப்படிப்புகளுக்கான வழக்கமான மாணவர் சேர்க்கை நடத்தப்பட்டது, அதில் கீழ்க்காணும் பிரிவுகளில் இடஒதுக்கீட்டு சுற்றுக்காக சில காலியிடங்கள் நிரப்பப்படவுள்ளது.
1. ஒளிப்பதிவு (Cinematography) - BC 1, MBC/DNC 1, *SIFCC 1
2. எண்மிய இடைநிலை (Digital Intermediate)- 7.5% Govt. School 1, SC / ST 2 MBC/DNC 2, BC 4, OC 1, Other State 1
3. ஒலிப்பதிவு (Audiography) - 7.5% Govt. School 1, SC / ST 1, MBC/DNC 2 BC 4, Other State 1
4. இயக்குதல் மற்றும் திரைக்கதை எழுதுதல் (Direction and Screen play Writing) - BC 2
5. படத்தொகுப்பு (Film Editing) - MBC/DNC 2, OC 1
6. உயிர்ப்பூட்டல் மற்றும் காட்சிப்பயன் (Animation and Visual Effects) - SC / ST 1, BC 2
* விண்ணப்பதாரரின் தந்தை அல்லது தாய் திரைப்படத்துறையை சார்ந்தவர் என்பதற்கு சான்றிதழ் அளிக்கும் வகையில் தென்னிந்திய திரைப்பட வர்த்தகச் சங்கம் அளிக்கும் சான்றிதழ் மற்றும் அடையாள அட்டை நகலினை அவரது விண்ணப்பத்துடன் இணைக்கப்படவேண்டும்.
27.07.2026 முதல் www.filminstitute.tn.gov.in எனும் இணையதளத்தில், மாணவர் சேர்க்கைக்கான படிவத்தினை, பயனாளர் கையேட்டின்(User Manual) அறிவுறுத்தலின்படி பூர்த்தி செய்து, விண்ணப்ப கட்டணத்தினை செலுத்தி பதிவு செய்தும், அனைத்து உரிய ஆவணங்களையும் 05.08.2026 மாலை 5 மணிக்குள் பதிவேற்றம் செய்யலாம் என்றும் தெரிவிக்கப்படுகிறது.
எனவே, கலை ஆர்வம் உள்ள அனைத்து மாணவ/மாணவியரும் மேற்குறிப்பிடப்பட்ட பாடப்பிரிவுகளில் சேர்ந்து பயனடையுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது,