மாணவர் சேர்க்கை 
கல்வி&வேலைவாய்ப்பு

யோகா மற்றும் இயற்கை மருத்துவ பட்டப் படிப்புக்கான மாணவர் சேர்க்கை - அறிவிப்பு வெளியீடு

விண்ணப்பிக்க நாளை மறுநாள் (23.11.2026) மாலை 5 மணி கடைசி நாளாகும்.

சென்னை,

பி.என்.ஒய்.எஸ். மருத்துவப் படிப்பு இரண்டாம் கட்ட இறுதி கலந்தாய்வு: நாளை (22.11.2026) இணையவழி விண்ணப்பப் பதிவு தொடங்கிறது. இதுகுறித்து இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதித்துறை இயக்குநர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

பி.என்.ஒய்.எஸ். பட்ட படிப்பு

தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசு மற்றும் சுயநிதி யோகா மற்றும் இயற்கை மருத்துவ கல்லூரிகளில் 2026–2027ஆம் கல்வியாண்டிற்கான பி.என்.ஒய்.எஸ். (யோகா மற்றும் இயற்கை மருத்துவம்) பட்டப் படிப்பு, அரசு ஒதுக்கீடு / அரசிடம் ஒப்படைக்கப்பட்ட இடங்கள் மற்றும் நிர்வாக ஒதுக்கீடு ஆகியவற்றின் கீழ் மூன்று சுற்று இணையவழி கலந்தாய்வுகள் மற்றும் முதற்கட்ட இறுதி இடங்களுக்களுக்கான கலந்தாய்வு நிறைவடைந்த பின்னரும் காலியாக உள்ள இடங்களை நிரப்புவதற்கான மாணவர் சேர்க்கைக்கு தகுதியுள்ள இணையவழியில் மட்டுமே (Online Applications) விண்ணப்ப படிவங்கள் ஏற்றுக்கொள்ளப்படும்.

நாளை முதல் விண்ணப்பிக்கலாம்

5½ ஆண்டுகள் கொண்ட பி.என்.ஒய்.எஸ். மருத்துவ பட்டப்படிப்பு (யோகா மற்றும் இயற்கை மருத்துவம்) படிப்புகளில் சேர விரும்பும் 10+2 பெற்ற மாணவ-மாணவிகள் www.tnayushselection.org என்ற இணையதளம் மூலமாக மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.

கடைசி நாள்: 23.11.2026

இதற்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு நாளை (22.11.2026) தொடங்குகிறது. விண்ணப்பிக்க நாளை மறுநாள் (23.11.2026) மாலை 5 மணி கடைசி நாளாகும். அரசு ஒதுக்கீடு, அகில இந்திய ஒதுக்கீடு மற்றும் நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கு மாணவர்கள் தனித்தனியாக விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பக் கட்டணம்

அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கு விண்ணப்பிக்க OC, BC, BCM, MBC/DNC பிரிவினருக்கு ரூ.500 விண்ணப்ப கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. SC, SCA மற்றும் ST பிரிவினருக்கு கட்டண விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கு அனைத்து பிரிவினரும் ரூ.1,000 கட்டணம் செலுத்த வேண்டும்.

விண்ணப்ப கட்டணம், கலந்தாய்வு கட்டணம் மற்றும் கல்வி கட்டண முன்பணம் ஆகியவற்றை ஆன்லைன் மூலமாக மட்டுமே செலுத்த வேண்டும். காலியிட விவரங்கள், www.tnayushselection.org என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து முழுமையாக படித்த பின் அசல் சான்றிதழ்களை பதிவேற்றி விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

இரண்டாம்கட்ட இறுதி காலியிடங்களுக்கான சுற்றின் காலியிட விவரங்கள் தேர்வுக்குழுவின் அதிகாரப்பூர்வ இணையதளமான www.tnayushselection.org-ல் பதிவேற்றம் செய்யப்படும். விண்ணப்ப கட்டணம், இணையவழி கலந்தாய்வுக் கட்டணம், கல்விக் கட்டண முன்பணம் இவை அனைத்தும் இணையவழி மூலமாக மட்டுமே செலுத்தவேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT