புதுடெல்லி,
யுஜிசி நெட் தேர்வுகள் டிசம்பர் 14 முதல் 18-ம் தேதி வரையும், 21-ம் தேதியும் கணினிவழியில் நடத்தப்பட இருப்பதாக என்டிஏ அறிவித்துள்ளது.
பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் உதவி பேராசிரியராக பணியாற்றவும், இளநிலை ஆராய்ச்சி படிப்புக்கான உதவித்தொகை பெறவும் யு.ஜி.சி. ‘நெட்’ தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும்.
இந்நிலையில், இந்த ஆண்டுக்கான யு.ஜி.சி. ‘நெட்’ தேர்வுகள் வருகிற டிசம்பர் மாதம் 14-ந்தேதி முதல் 18-ந்தேதி வரையும், அதனைத்தொடர்ந்து 21-ந்தேதியும் கணினி வழியில் நடத்தப்பட இருப்பதாக தேசிய தேர்வு முகமை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
மேலும், மாணவர்களுக்கான தேர்வு மையம் அமைந்துள்ள நகரம் தொடர்பான விவரங்கள், தேர்வு தொடங்குவதற்கு 21 நாட்களுக்கு முன்பாகவே இணையதளத்தில் வெளியிடப்படும் என்றும் அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.