புதுடெல்லி,
மத்திய அரசு துறைகளில் உயர் பொறுப்புகளில் ஏற்படும் காலியிடங்களை யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் எனப்படும் மத்திய குடிமைப்பணிகள் தேர்வு வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. மொத்தம் 45 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதுபற்றிய விவரங்கள் வருமாறு:
பணியிடங்கள்: மொத்தம் 45 இடங்கள் உள்ளன.
நிர்வாக அதிகாரி - 27,
உதவி பேராசிரியர் 4,
மைனிங் இன்ஜினியர் 4,
அக்கவுன்ட்ஸ் ஆபிசர் 3,
ரிசர்ச் ஆபிசர் 2,
மொழி பெயர்ப்பாளர் 2
கல்வித்தகுதி: பட்டப்படிப்பு / பி.இ.,/பி.டெக்.,/எம்.இ.,/எம்.டெக். உள்ளிட்ட படிப்புகளை முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
வயது வரம்பு: 18 வயது முதல் 45 வயது வரை
தேர்வு முறை: எழுத்துத்தேர்வு, நேர்முகத்தேர்வு
விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்
விண்ணப்பிக்க கடைசிநாள்: 29.5.2026
கூடுதல் விவரங்களுக்கு: upsc.gov.in