சென்னை,
தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழக சேர்க்கைக் குழு (இளநிலை பட்டப்படிப்பு) தலைவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது;-
“தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழக இளநிலை பட்டப்படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கைக்கு https://adm.tanuvas.ac.in என்ற பல்கலைக்கழக இணையதளம் மூலம் 25-ந்தேதி (நாளை மறுதினம்) காலை 10 மணி முதல் அடுத்த மாதம் (ஜூன்) 17-ந்தேதி மாலை 5 மணி வரை விண்ணப்பிக்கலாம்.
அயல்நாடு வாழ் இந்தியர், அயல்நாடு வாழ் இந்தியர்களின் குழந்தைகள், அயல்நாடுவாழ் இந்தியரின் நிதி ஆதரவு பெற்றோர் மற்றும் அயல்நாட்டினர் ஆகியோர்களுக்கான இடஒதுக்கீடு, இணையதள விண்ணப்ப வழிமுறைகள் மற்றும் இதர விவரங்கள் https://adm.tanuvas.ac.in என்ற இணையதளத்தில் சென்று அறிந்து கொள்ளலாம்.”
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.