கல்வி&வேலைவாய்ப்பு

தேசிய பாதுகாப்பு அகாடமி, கடற்படை அகாடமியில் சேர்வதற்கான தகுதிகள் என்ன? - முழு விவரம்

தேசிய பாதுகாப்பு அகாடமி ( NDA) என்பது இந்திய முப்படைகளுக்கான அதிகாரிகளை தயார்படுத்துவதற்காக அமைக்கப்பட்ட ஒரு பயிற்சி நிறுவனம்.

தேசிய பாதுகாப்பு அகாடமி, கடற்படை அகாடமி

யு.பி.எஸ்.சி (UPSC)என அழைக்கப்படும் "யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் "(UNION PUBLIC SERVICE COMMISSION) ஆண்டுதோறும் ஏராளமான காலிப் பணியிடங்களுக்காக தேர்வு நடத்துகிறது. குறிப்பாக, தேசிய பாதுகாப்பு அகாடமி ( NATIONAL DEFENCE ACADEMY) மற்றும் கடற்படை அகாடமி ( NAVAL ACADEMY) ஆகிய பயிற்சி நிறுவனங்களுக்காக தரம் வாய்ந்த பணியாளர்களை நியமிக்க தேர்வு நடத்துகிறது.

தேசிய பாதுகாப்பு அகாடமி ( NATIONAL DEFENCE ACADEMY) என்பது இந்திய முப்படைகளுக்கான அதிகாரிகளை தயார்படுத்துவதற்காக அமைக்கப்பட்ட ஒரு பயிற்சி நிறுவனம். இங்கு ராணுவம் கடற்படை மற்றும் விமானப்படை அதிகாரிகளை தேர்ந்தெடுக்க தேர்வு நடத்தப்படுகிறது. மகாராஷ்டிரா மாநிலம் புனே அருகில் உள்ள “கடக் வாஸ்தலா”வில் இந்த நிறுவனம் அமைந்துள்ளது. இதனை என். டி. ஏ (NDA) என சுருக்கமாக அழைப்பார்கள். 

கல்வித் தகுதி:

இந்த தேர்வு எழுத பிளஸ் 2 தேர்வில் வெற்றி பெற்றவர்கள்  தகுதியானவர்கள் ஆவார்கள். மேலும், பிளஸ் 2 தேர்வுக்கு இணையான படிப்பை முடித்தவர்களும் இந்த தேர்வு எழுதலாம். 

தேசிய பாதுகாப்பு அகாடமி , ராணுவ பிரிவிற்கு பிளஸ் -2 தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களை தகுதி வாய்ந்தவர்களாக கருதுகிறது. 

ஆனால், தேசிய பாதுகாப்பு அகாடமியின் விமானப்படை மற்றும் கடற்படை பிரிவுகளுக்கு பிளஸ் -2 வகுப்பில் இயற்பியல் வேதியியல் மற்றும் கணித பாடங்களில் தேர்ச்சி பெற்றவர்களை மட்டுமே தகுதி வாய்ந்தவர்களாக கருதுகிறார்கள்.

எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் தேர்வுகளில் வெற்றி பெற்றவர்கள் மட்டுமே தர வரிசை பட்டியல் அடிப்படையில் இந்த பயிற்சி நிறுவனங்களில் சேர்த்துக் கொள்ளப்படுகிறார்கள்.

வயது வரம்பு;

ஆண்களில் 16.5 வயது நிரம்பியவர்களும் பெண்களில் 19.5 வயது நிரம்பியவர்களும் இந்த தேர்வு எழுத விண்ணப்பிக்கலாம்.

உடல் தகுதி;

இந்த தேர்வு எழுத உடல் தகுதி கண்டிப்பாக தேவை. குறிப்பாக, 

• ஓடுதல் (Running) : 15 நிமிடங்களில் 2.4 கி.மீ

• கயிறு தாண்டுதல் (Skipping)

• புஷ்-அப்ஸ் மற்றும் சிட்-அப்ஸ் (Pushups & Sit-ups): ஒவ்வொன்றும் குறைந்தபட்சம் 20

• சின்-அப்ஸ் (Chin-ups): குறைந்தபட்சம் 0

• கயிறு ஏறுதல் (Rope Climbing): 3.4 மீட்டர்

உயரத் தேவைகள் (Height Requirements)

தரைப்பணிக்கு (For Ground Duty)

கீழே குறிப்பிடப்பட்டுள்ள மாநிலங்களைத் தவிர 157.5 செ.மீ –

• கூர்க்காக்கள் மற்றும் பின்வரும் பகுதிகளைச் சேர்ந்தவர்களுக்கான உயரம்

• இந்தியாவின் வடகிழக்குப் பகுதிகள் மற்றும் உத்தரகாண்டின் மலைப்பகுதிகள் 152.5 செ.மீ ---

• லட்சத்தீவைச் சேர்ந்த விண்ணப்பதாரர்கள் 155.5 செ.மீ .

பறக்கும் பணிக்கு (For Flying Duty)

• உயரத் தேவை -அமர்ந்த நிலை உயரம்: 81.5 செ.மீ-- 96 செ.மீ

• கால் நீளம்: 99 செ.மீ --120 செ.மீ

• தொடை நீளம் --- 64 செ.மீ

தேர்வு அமைப்பு

“யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷன்” நடத்தும் தேசிய பாதுகாப்பு அகாடமி மற்றும் கடற்படை அகாடமி தேர்வு (NATIONAL DEFENCE ACADEMY &NAVAL ACADEMY).

இரண்டு நிலைகளில் நடத்தப்படுகிறது 

அவை --

1. எழுத்துத் தேர்வு (WRITTEN EXAMINATION).

2. அறிவுத்திறன் மற்றும் ஆளுமை தேர்வு (INTELLIGENCE AND PERSONALITY TEST) ஆகும்

1.எழுத்துத் தேர்வு (WRITTEN EXAMINATION);

எழுத்து தேர்வு (WRITTEN EXAMINATION).--- நேஷனல் டிபன்ஸ் அகடமி நடத்துகிறது. எழுத்து தேர்வில் கணிதம் (MATHEMATICS ) மற்றும் பொது திறன் தேர்வு (GENERAL ABILITY TEST )ஆகிய பகுதிகளில் கேள்விகள் இடம் பெறும்.

• கேள்விகள் MULTIPLE CHOICE TYPE QUESTIONS அமைப்பில் அமைக்கப்பட்டிருக்கும். கேள்விகள் ஆங்கிலம் மற்றும் இந்தி மொழிகளில் மட்டுமே இடம்பெறும்.தேர்வில் எழுதப்படும் தவறான விடைகளுக்கு மதிப்பெண்கள் குறைக்கப்படும். 

• இந்த தேர்வு ஆப் லைன் முறையில் (OFFLINE MODE) நடத்தப்படுகிறது. 

• கணிதப் பாடத்திற்கு மொத்தம் 300 மதிப்பெண்கள் வழங்கப்படும். அதேபோல், பொதுத்திறன் தேர்வு பகுதிக்கு 600 மதிப்பெண்கள் வழங்கப்பட்டுள்ளது.

• கணித பாடத்திற்கு பதில் எழுத 2 மணி 30 நிமிடங்கள் வழங்கப்படும் அதேபோல் பொதுத்திறன் தேர்வு பகுதிக்கும் 2 மணி 30 நிமிடங்கள் தேர்வு எழுத வழங்கப்படுகிறது. 

• பொதுவாக மொத்தம் 5 மணி நேரம் நடைபெறும் இந்த தேர்வுகளுக்கு மொத்த மதிப்பெண்கள் 900 ஆகும்.

2. அறிவுத்திறன் மற்றும் ஆளுமை தேர்வு (INTELLIGENCE AND PERSONALITY TEST);

அறிவுத்திறன் மற்றும் ஆளுமை தேர்வை "சர்வீசஸ் செலக்சன் போர்ட்"(SERVICES SELECTION BOARD)(SSB) என்னும் அமைப்பு நடத்துகிறது.

அறிவுத்திறன் மற்றும் ஆளுமை தேர்வு (INTELLIGENCE AND PERSONALITY TEST). என்னும் இந்த தேர்வை ஒருவரின் ஆளுமை திறனை மதிப்பிடும் தேர்வாக (PERSONALITY TEST) கருதுகிறார்கள்.

எழுத்து தேர்வில் (WRITTEN EXAMINATION) வெற்றி பெற்ற அனைவரும் இரண்டாம் நிலை தேர்வான இந்த தேர்வில் கலந்து கொள்ள வேண்டும். 

இந்தத் தேர்வில் வெற்றி பெற்றவர்கள், திறன் வாய்ந்த அதிகாரிகள் மூலம் நடத்தப்படும் நேர்காணல் (INTERVIEW ) நிகழ்வில் கலந்து கொள்ள வேண்டும். 

நேர்காணல் நிகழ்வில் கலந்து கொள்பவர்கள் கண்டிப்பாக கீழ்க்கண்ட சான்றிதழ்களை கொண்டு வர வேண்டும். 

• தேசிய பாதுகாப்பு பயிற்சி அகாடமியின் (Army Wing of National Defence Academy ) ராணுவ பிரிவில் சேர்வதற்கு பிளஸ் 2 சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும். 

• தேசிய பாதுகாப்பு அகாடமியின் விமானப்படை மற்றும் கடற்படை பிரிவுகளில் (Air Force and Naval Wings of National Defence Academy) சேர விரும்புபவர்கள் பிளஸ் 2.தேர்வில் இயற்பியல் வேதியியல் கணித பாடங்களுடன் தேர்ச்சி பெற்றதற்கான சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும்.

சான்றிதழ்கள் சரிபார்த்த பின்னரே நேர்காணல் எனப்படும் நேர்முகத் தேர்வில் கலந்து கொள்ள அனுமதிக்கப்படுவார்கள்.

தேர்வுக்கான பாடங்கள்

தேர்வுக்கான பாடங்களை சற்று விரிவாக பார்ப்போம்

1,கணிதத்தின் கீழ் உள்ள தலைப்புகள் (Topics covered under Mathematics)

• இயற்கணிதம் (Algebra)

• நுண்கணிதம் (Calculus)

• அணிகள் மற்றும் அணிக்கோவைகள் (Matrices and Determinants)

• தொகை நுண்கணிதம் மற்றும் வகைக்கெழு சமன்பாடுகள் (Integral Calculus and Differential Equations)

• முக்கோணவியல் (Trigonometry)

• திசையன் இயற்கணிதம் (Vector Algebra)

• இரு மற்றும் முப்பரிமாண பகுப்பாய்வு வடிவியல் (Analytical Geometry Of Two and Three Dimension)

• புள்ளியியல் மற்றும் நிகழ்தகவு (Statistics and Probability)

2.ஆங்கிலத்தின் கீழ் உள்ள தலைப்புகள் (Topics covered under English)

• பிழைகளைக் கண்டறிதல் Spotting Errors

• புரிந்துகொள்ளுதல் Comprehension

• வார்த்தைகளைத் தேர்ந்தெடுத்தல் Selecting Words

• ஒரு வாக்கியத்தில் வார்த்தைகளை வரிசைப்படுத்துதல் Ordering of Words in a Sentence

• வாக்கிய மேம்பாடு Sentence Improvement

• எதிர்ச்சொற்கள் Antonyms

• ஒத்த சொற்கள் Synonyms

3.பொது அறிவின் கீழ் உள்ள தலைப்புகள் Topics covered under General Knowledge

• இயற்பியல் Physics

• வேதியியல் Chemistry

• பொது அறிவியல் General Science

• வரலாறு மற்றும் சுதந்திரப் போராட்டம் History & Freedom Movement

• புவியியல் Geography

• நடப்பு நிகழ்வுகள் Current Affairs/ Events

தேர்வு மையங்கள்

இந்த தேர்வு எழுத ,தேர்வு மையங்கள் இந்தியா முழுவதும் பல முக்கிய நகரங்களில் உள்ளன. தேர்வு மையங்களாக அகர்தலா, பிலாஸ்பூர் ஆக்ரா, சண்டிகர், அகமதாபாத் சென்னை, கோயம்புத்தூர், அலிகார் ,கட்டாக் அல்மோரா , டெல்லி,அனந்தபூர், தார்வாட் ,அவுரங்காபாத் ,திஸ்பூர் , பரேலி, பரிதாபாத், பெங்களூரு, ஸ்ரீநகர், போபால், காசியாபாத், கரக்பூர், குவாலியர் ஹைதராபாத் இம்பால் ,இந்தூர் , இட்டா நகர், ஆகிய இடங்களில் தேர்வு மையங்கள் உள்ளன. 

இவைகள் தவிர, ஜபல்பூர் ,ஜெய்ப்பூர், ஜம்மு கோத்பூர் கொச்சி, கொல்கத்தா கோழிக்கோடு ,லக்னோ, லூதியானா ,மதுரை மைசூர், மும்பை ,நாக்பூர் , சபல்பூர் , லூதியானா ,மதுரை மைசூர், மும்பை ,நாக்பூர் , சபல்பூர் , ஆகிய நகரங்களிலும் தேர்வு மையங்கள் செயல்படும்

நவிமும்பை ,ஷில்லாங் பனாஜி, பாட்னா, போர்ட்பிளேயர், புதுச்சேரி, அலகாபாத் ,புதுச்சேரி, திருவனந்தபுரம், புனே ,திருச்சி, ராய்ப்பூர் ,திருப்பதி ,ராஜ்கோட், உதயப்பூர், ராஞ்சி ,வாரணாசி, வேலூர் ,விஜயவாடா , விசாகப்பட்டினம், வாரங்கல் ஆகிய நகரங்களில் தேர்வு எழுத வாய்ப்புகள் வழங்கப்படுகின்றன.

விண்ணப்பக் கட்டணம்

விண்ணப்பக் கட்டணமாக பொதுவாக பொது பிரிவினருக்கு ரூபாய் 100 நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இருந்தபோதும், தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடி இனத்தைச் சேர்ந்த விண்ணப்பதாரர்களுக்கும், பெண்களுக்கும் இந்த விண்ணப்ப கட்டணம் கிடையாது. மேலும், இளநிலை அதிகாரிகள், துணை அதிகாரிகள், ஹவில்தார், நாயக் மற்றும் படைவீரர்களின் வாரிசுகளுக்கும் இந்த விண்ணப்ப கட்டணம் வசூலிக்கப்படுவதில்லை

மேலும் விவரங்களுக்கு

மேலும் விவரங்களுக்கு தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி 

National Defence Academy,

Khadakwasla,

Pune - 411023,

Maharashtra,

India.

Official NDA Academy Site : https://nda.nic.in/

Exam Registration & Notifications : https://upsconline.nic.in

UPSC Main Website : https://upsc.gov.in

Army Wing Joining : https://joinindianarmy.nic.in

Navy Wing Joining : https://www.joinindiannavy.gov.in

Air Force Wing Joining : https://careerindianairforce.cdac.in