கல்வி&வேலைவாய்ப்பு

இந்திய விண்வெளித் துறை வழங்கும் படிப்புகள் என்னென்ன? முழு விவரம்

இந்திய தொலை உணர்வு நிறுவனம் போன்ற நிறுவனங்கள் இந்திய மாணவர்கள் விண்வெளி சம்பந்தப்பட்ட பாடங்களை படித்து தெரிந்து கொள்வதற்கும், அந்தத் துறையில் தேவையான ஆராய்ச்சிகளை மேற்கொள்வதற்கும் பல்வேறு படிப்புகளையும் நடத்தி வருகிறது. அந்த படிப்புகள் பற்றிய விவரங்களை விரிவாக பார்ப்போம்.

இந்திய விண்வெளித் துறை மூலம் இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் (INDIAN SPACE RESEARCH ORGANISATION)(ISRO) மற்றும் சில தன்னாட்சி அமைப்புகள், மையங்கள் ஆகியவை செயல்படுகின்றன.

இவற்றின் முக்கிய பணிகளாக-

1. ஏவு வாகன திட்டங்கள் (LAUNCH VEHICLE PROGRAMME) :

LAUNCH VEHICLE MARK-3 (LVM3) மற்றும் POLAR SATELLITE LAUNCH VEHICLE (PSLV)-போன்ற உள்நாட்டிலேய தயாரிக்கப்படும்

ஏவு வாகனங்களை உருவாக்குதல் என்ற திட்டத்தின் முக்கிய நோக்கமாகும்.

2. செயற்கைக்கோள் தொடர்பு மற்றும் வழிகாட்டுதல் (SATELLITE COMMUNIATION AND NAVIGATION) :

INDIAN NATIONAL SATELLITE SYSTEM (INSAT) மற்றும் NAVIGATION WITH INDIAN CONSTELLATION (NaviC) போன்ற அமைப்புகளை நிர்வகித்து வழிகாட்டுதல் ஆகும்.

3. புவி கண்காணிப்பு மற்றும் தொலை உணர்வு (EARTH OBSERVATION AND REMOTE SENSING):

வானிலை முன்னறிவிப்பு (WEATHER FORECASTING), வளங்களை கண்காணித்தல் (RESOURSE MONITORING), மற்றும் பேரிடர் மேலாண்மை (DISASTER MANAGEMENT) ஆகியவற்றை செயல்படுத்த செயற்கைக்கோள் படங்களை பயன்படுத்துதல்.

4. மனிதர்கள் பங்கேற்கும் மற்றும் மேம்பட்ட விண்வெளி பயணங்கள்(MANNED AND ADVANCE D MISSIONS) :

மனிதர் விண்வெளிப் பயணம்(GAGANYAAN ) மற்றும் விண்வெளி இணைப்புச் சோதனை ( SPACE DOCKING EXPERIMENT) போன்ற முக்கிய திட்டங்களை செயல்படுத்துதல்

மேலே குறிப்பிட்ட திட்டங்களை ஒழுங்குபடுத்தவும், சிறந்த முறையில் செயல்படுத்தவும் இந்திய விண்வெளித் துறை "விக்ரம் சாராபாய் விண்வெளி மையம்" (VICKRAM SARABHAI SPACE CENTRE) (VSSC) மற்றும் "யூ .ஆர் .ராவ் சேட்டிலைட் சென்டர்" (U.R.RAO SATELLITE CENTE) (URSC) ஆகிய அமைப்புகளோடு ஒருங்கிணைந்து செயல்படுகிறது.

மேலும், இந்தியாவில் தனியார் விண்வெளித் துறை பங்கேற்பை ஊக்குவிக்கும் வகையில் ஒற்றைச் சாளர (SINGLE WINDOW)தன்னாட்சி முகமையாக செயல்பட "இன்- ஸ்பேஸ்" (IN-SPACE )என்ற" INDIAN NATIONAL SPACE PROMOTION AND AUTOMATION CENTRE "அமைப்பு சமீபத்தில் உருவாக்கப்பட்டுள்ளது.

இந்திய விண்வெளி துறையின் கீழ், இந்திய விண்வெளி தொழில்நுட்ப நிறுவனம் (INDIAN INSTITUTE OF SPACE TECHNOLOGY)(IIST), "இந்திய தொலை உணர்வு நிறுவனம்"(INDIAN INSTITUTE OF REMOTE SENSING)(IIRS) போன்ற நிறுவனங்கள் இந்திய மாணவர்கள் விண்வெளி சம்பந்தப்பட்ட பாடங்களை படித்து தெரிந்து கொள்வதற்கும், அந்தத் துறையில் தேவையான ஆராய்ச்சிகளை மேற்கொள்வதற்கும் பல்வேறு படிப்புகளையும் நடத்தி வருகிறது. அந்த படிப்புகள் பற்றிய விவரங்களை விரிவாக பார்ப்போம்.1.தொலை உணர்வு மற்றும் ஜி.ஐ.எஸ் இல் முதுகலை பட்டயம் (POST GRADUATE DIPLOMA (PGD) IN REMOTE SENSING &GIS.)

இந்தப் படிப்பில் சிறப்பு பாட பிரிவாக (SPECIALISATION) வேளாண்மை (AGRICULTURE) மற்றும் மண்வளம் (SOILS )ஆகிய உள்ளன.ஒருமுறை தேர்வு செய்யப்பட்டு, ஒதுக்கப்பட்ட சிறப்பு பிரிவு, பின்னர் மாற்றி தரப்பட மாட்டாது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

படிப்பில் சேர கல்வி தகுதி.

இந்தப் படிப்பில் சேர கீழ்க்கண்ட ஏதேனும் ஒரு படிப்பில் முதுநிலை பட்டம் பெற்றிருக்க வேண்டியது அவசியம்.

· M.Sc IN AGRICULTURE

· M.Sc IN AGRI. PHYSICS

· M.Sc IN SOIL SCI.

· M.Sc IN AGROMETEOROLOGY

· M.Sc IN ENTOMOLOGY

· M.Sc IN PATHOLOGY

· M.Sc IN AGRONOMY

· M.Sc IN PLANT PHYSIOL.

· M.Sc IN HORTICULTURE

· M.Sc IN AGRIC. BOTANY

· M.Sc IN SOIL CONSERVATION & WATER MGMT.

· M.Sc IN CLIMATE CHANGE ADAPTATION

· M.Sc IN ENV. SCI. OR EQUIVALENT

· B.E./ B.Tech. IN AGRI. ENGG.

· B.E./ B.Tech. IN AGRI. INFORMATICS

· B.E./ B.Tech. IN AGRI. & FOOD ENGG. OR EQUIVALENT

· B.Sc. (4 YEARS DEGREE) IN AGRICULTURE

· B.Sc. (4 YEARS DEGREE) IN HORTICULTURE

· B.Sc (4 YEARS DEGREE) IN SERICULTURE

· MASTER'S IN GEOGRAPHY

· M.Sc IN AGRICULTURE ANALYTICS

இந்தப் படிப்பில் மாணவர்கள் சேர்க்கைக்கான தேர்வு இணையவழி நேர்காணல் (ONLINE INTERVIEW) மற்றும் கல்விச் சான்றிதழின் அடிப்படையில் நடைபெறும்.

வயது வரம்பு

இந்த படிப்பில் சேர அதிகபட்ச வயது வரம்பு 45 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

2. தொலை உணர்வு மற்றும் புவியியல் தகவல் அமைப்பு (REMOTE SENSING AND GIS) படிப்பில் முதுகலை பட்டயம் (PGD)

(POST GRADUATE DIPLOMA (PGD) IN REMOTE SENSING &GIS.)

சிறப்பு பாடப்பிரிவு (SPECIALISATION): வனவளங்கள் மற்றும் சூழல் தொகுதி பகுப்பாய்வு (FOREST RESOURCES AND ECO SYSTEM ANALYSIS).

இந்தப் படிப்பிலும் தேர்வு செய்யப்பட்டு ஒதுக்கப்பட்ட சிறப்பு பிரிவில் படித்துக் கொண்டிருக்கும் போதே மற்ற படிப்பிற்கு மாற்றிச் செல்ல அனுமதி கிடையாது.

இந்தப் படிப்பில் இணைய வழி நேர்காணல் மற்றும் கல்வி சார் பதிவுகளின் (ONLINE INTERVIEW AND ACADEMIC RECORDS) அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெறும்.

படிப்பில் சேர கல்வி தகுதிகள்.

இந்த படிப்பில் கீழ்கண்ட கல்வி தகுதி உள்ளவர்கள் சேர்ந்து படிக்கலாம்.

· M.Sc. IN FORESTRY

· M.Sc. IN ECOLOGY

· M.Sc.. IN BOTANY

· M.Sc. IN WILDLIFE SCIENCE

· M.Sc. IN BIOSCI.

· M.SC. IN ZOOLOGY

· M.Sc.. IN ENV. SCIENCE

· M.Sc. IN ENV. MANAGEMENT.

· M.Sc. IN NATURAL RESOURCES MANAGEMENT

· M.Sc. IN LIFE SCIENCE.

· B.Sc. (4 YEARS DEGREE) IN FORESTRY

· B.Sc. (4 YEARS DEGREE) IN BIOTECH.

· B.Sc. (4 YEARS DEGREE) IN FOREST-BIOTECH.

· B.Sc (4 YEARS DEGREE) IN BIOINFORMATICS

· B.E./ B.Tech. IN BIOTECH.

· B.E./ B.Tech. IN FOREST. BIOTECH

· B.E./B.Tech. IN BIOINFORMATICS

· B.E./B.TECH. IN ENVIRONMENTAL ENGG.

· MASTERS IN GEOGRAPHY

· M.SC. IN PLANT SCIENCE

வயது வரம்பு

இப்படிப்பில் சேர அதிகபட்ச வயது வரம்பு 45 ஆகும்.

3. தொலை உணர்வு மற்றும் GIS இல் முதுகலை பட்டயம் (POST GRADUATE DIPLOMA (PGD) IN REMOTE SENSING &GIS)

சிறப்பு பிரிவு :புவி அறிவியல் (GEO SCIENCE)

இந்த பட்டய படிப்பிலும் தேர்வு செய்யப்பட்டு ஒதுக்கப்பட்ட சிறப்பு பிரிவில் இருந்து இன்னொரு பாட பிரிவுக்கு மாற்ற அனுமதிக்கப்பட மாட்டாது.

படிப்பில் சேர கல்வி தகுதி.

· M.SC./M.SC.(TECH.)/M.TECH. IN GEOL.

· M.SC./M.SC.(TECH.)/M.TECH. IN APPL. GEOL.

· M.SC./M.SC.(TECH.)/M.TECH. IN GEOPHYS.

· M.SC./M.SC.(TECH.)/M.TECH. IN EARTH SCI.

· M.SC./M.SC.(TECH.)/M.TECH. IN GEOEXPLOR.

· M.SC./M.SC.(TECH.)/M.TECH. IN MARINE GEOL. & GEOPHYS.

· M.SC./M.SC.(TECH.)/M.TECH. IN PETROL. ENGG.

· M.SC./M.SC.(TECH.)/M.TECH. IN GEO-ENGG.

· M.SC./M.SC.(TECH.)/M.TECH. IN MINING ENGG.

· M.SC./M.SC.(TECH.)/M.TECH. IN GEOGRAPHY OR EQUIVALENT

· B.E./B.TECH. IN CIVIL ENGG.

· B.E./B.TECH. IN GEOSCI.

· B.E./B.TECH. IN MINING ENGG.

· CIVIL ENGG

· B.E./B.TECH. IN GEO-ENGG

· B.E./B.TECH IN GEOEXPLOR

· B.E./B.TECH. IN GEOL. TECH. & GEOINFORMATICS OR EQUIVALENT

· M.SC./M.SC.(TECH.)/M.TECH. IN APPL. GEOPHYS

இந்தப் படிப்பில் இணையவழி நேர்காணல் மற்றும் கல்வி சார்பில் பதிவுகளின் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெறும்.

வயது வரம்பு

இப்படிப்பில் சேர அதிகபட்ச வயது வரம்பு 45 ஆகும்.

4. தொலை உணர்வு மற்றும் GIS இல் முதுகலை பட்டயம் (POST GRADUATE DIPLOMA (PGD) IN REMOTE SENSING &GIS)

சிறப்பு பிரிவு :புவி அறிவியல் (GEO SCIENCE)

இந்த பட்டய படிப்பிலும் தேர்வு செய்யப்பட்டு ஒதுக்கப்பட்ட சிறப்பு பிரிவில் இருந்து இன்னொரு பாட பிரிவுக்கு மாற்ற அனுமதிக்கப்பட மாட்டாது.

படிப்பில் சேர கல்வி தகுதி.

· MASTER'S IN DISASTER MGMT.

· MASTER'S IN NATURAL RESOURCE MGMT.

· MASTER'S IN ENV. MGMT.

· MASTER'S IN METEOROLOGY

· MASTER'S IN PHY.

· MASTER'S IN MATHS.

· MASTER'S IN BOTANY

· MASTER'S IN ZOOLOGY.

· MASTER'S IN GEOL.

· MASTER'S IN EARTH SCI.

· MASTER'S IN ENV SCI.

· MASTER'S IN MARINE SCI.

· MASTER'S IN ATM. SCI.

· MASTER'S IN AGRICULTURE

· MASTER'S IN FORESTRY

· MASTER'S IN GEOGRAPHY OR EQUIVALENT

· B.ARCH./ B.PLAN./M.PLAN. OR EQUIVALENT

· B.E./ B.TECH. IN CIVIL ENGG.

· B.E./ B.TECH. IN ENV. ENGG.

· B.E./ B.TECH. IN GEOSCI.

· B.E./ B.TECH. IN GEOEXPLOR.

· B.E./ B.TECH. IN GEO-ENGG.

· B.E./ B.TECH. IN EARTHQUAKE ENGG.

· B.SC. (4-YEAR) IN FORESTRY

· B.SC. (4-YEAR) IN AGRICULTURE

· B.E./B.TECH IN GEOINFORMATICS

இந்தப் படிப்பில் இணையவழி நேர்காணல் மற்றும் கல்வி சார்பில் பதிவுகளின் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெறும்.

வயது வரம்பு

இப்ப படிப்பில் சேர அதிகபட்ச வயது வரம்பு 45 ஆகும்.

5. தொலை உணர்வு மற்றும் GIS இல் முதுகலை பட்டயம் (POST GRADUATE DIPLOMA (PGD) IN REMOTE SENSING &GIS)

சிறப்பு பிரிவு: நகர்ப்புற மற்றும் பிராந்திய ஆய்வுகள் (URBAN AND REGIONAL STUDIES)

இந்த பட்டய படிப்பிலும் தேர்வு செய்யப்பட்டு ஒதுக்கப்பட்ட சிறப்பு பிரிவில் இருந்து இன்னொரு பாட பிரிவுக்கு மாற்ற அனுமதிக்கப்பட மாட்டாது.

படிப்பில் சேர கல்வி தகுதி.

· MASTER'S IN PLAN.

· MASTER'S IN ARCH.

· MASTER'S IN CIVIL

· MASTER'S IN COMP. SCI.

· MASTER'S IN GEOINFORMATICS

· MASTER'S IN GEOGRAPHY OR EQUIVALENT

· B.PLAN./ B.ARCH. OR EQUIVALENT

· B.E./ B.TECH. IN CIVIL

· B.E./ B.TECH. IN COMP. SCI

· B.E./ B.TECH. IN GEOINFORM. OR EQUIVALENT

இந்தப் படிப்பில் இணையவழி நேர்காணல் மற்றும் கல்வி சார்பில் பதிவுகளின் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெறும்.

வயது வரம்பு

இப் படிப்பில் சேர அதிகபட்ச வயது வரம்பு 45 ஆகும்.

தொடர்பு கொள்ள....

இந்த தேர்வு பற்றிய மேலும் பல விவரங்களுக்கு தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி

1.INDIAN INSTITUTE OF REMOTE SENSING,

INDIAN SPACE RESEARCH ORGANISATION

DEPARTMENT OF SPACE,

GOVERNMENT OF INDIA

4, KALIDAS ROAD,

DEHRADUN - 248 001

INDIA

Tel: + 91 -135 - 2524399 Fax:+ 91 -135 - 2741987

2.ISRO HEADQUARTERS,

ANTARIKSH BHAVAN,

NEW BEL ROAD

BENGALURU-560 094

PHONE: +91 80 22172294 / 96

Email: isropr@isro.gov.in

https://admissions.iirs.gov.in/coursecalender

https://www.iirs.gov.in https://www.isro.gov.in/AcademicCourses.htm