சென்னை,
சென்னை கணிதவியல் நிறுவனம் (CHENNAI MATHEMATICAL INSTITUTE) என்னும் இந்த நிறுவனம் இந்தியாவிலும், உலக அளவிலும் புகழ் பெற்ற கணிதவியல் கல்வி மற்றும் ஆராய்ச்சியில் சிறந்து விளங்கும் கல்வி நிறுவனமாகும். தேசிய அளவில் புகழ்பெற்ற கல்வியாளர்களை மூத்த பேராசிரியர்களை கல்வி குழுவில் இணைத்துக் கொண்டு மிக அற்புதமாக இந்த கல்வி நிறுவனம் நடத்தப்பட்டு வருகிறது.
வெளிநாடுகளில் புகழ்பெற்ற கல்வியாளர்களையும் வரவழைத்து இங்கே மாணவ மாணவிகளுக்கு போதிய பயிற்சிகள் வழங்குகிறார்கள்.
இங்கு-
· இயற்கணிதம் (ALGEBRA)
· பகுப்பாய்வு (ANALYSIS)
· வகைகழுச் சமன்பாடுகள் (DIFFERENTIAL EQUATIONS)
· வடிவியல் (GEOMETRY)
· நிகழ் தகவு (PROBABILITY)
· புள்ளியியல் (STATISTICS)
· இடவியல் (TOPOLOGY)
· எண் கோட்பாடு (NUMBER THEORY) மற்றும்
· வகைக்கெழு வடிவியல் (DIFFERENTIAL GEOMETRY) ஆகியவற்றில் முக்கிய ஆராய்ச்சிகள் முக்கிய உள்ளன.
கணினி அறிவியல், மென்பொருள்களின் அமைப்புகளின் விவர குறிப்பு மற்றும் கணினி பாதுகாப்பு ஆகிய ஆராய்ச்சி துறைகளும் உள்ளன.இயற்பியல் ஈர்ப்பு விசை குவாண்டம் புலக் கோட்பாடு சரக்கோட்பாடு மற்றும் கணித இயற்பியல் ஆகியவற்றில் ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன
சென்னை கணிதவியல் நிறுவனம் (CHENNAI MATHEMATICAL INSTITUTE) நிறுவனம் கீழ்க்கண்ட படிப்புகளை நடத்தி வருகிறது.
1. கணிதத்தில் 4 ஆண்டு பி.எஸ். (ஆனர்ஸ்)
(4-YEAR B.S. (HONOURS) PROGRAMME IN MATHEMATICS)
2. கணிதம் மற்றும் கணினி அறிவியலில் 4 ஆண்டு பி.எஸ். (ஆனர்ஸ்)
(4-YEAR B.S. (HONOURS) PROGRAMME IN MATHEMATICS AND COMPUTER SCIENCE)
3. கணிதம் மற்றும் இயற்பியலில் 4 ஆண்டு பி.எஸ். (ஆனர்ஸ்)
( 4-YEAR B.S. (HONOURS) PROGRAMME IN MATHEMATICS AND PHYSICS)
4. கணிதத்தில் 2 ஆண்டு எம்.எஸ்.சி.
(2-YEAR M.SC. PROGRAMME IN MATHEMATICS)
5. கணினி அறிவியலில் 2 ஆண்டு எம்.எஸ்.சி.
(2-YEAR M.SC. PROGRAMME IN COMPUTER SCIENCE)
6. தரவு அறிவியலில் 2 ஆண்டு எம்.எஸ்.சி.
(2-YEAR M.SC. PROGRAMME IN DATA SCIENCE)
7. கணிதத்தில் முனைவர் பட்டம் (Ph.D.)
(Ph.D. PROGRAMME IN MATHEMATICS)
8. கணினி அறிவியலில் முனைவர் பட்டம் (Ph.D.)
(Ph.D. PROGRAMME IN COMPUTER SCIENCE)
9. இயற்பியலில் முனைவர் பட்டம் (Ph.D.)
(Ph.D. PROGRAMME IN PHYSICS)
1. கணிதத்தில் 4 ஆண்டு பி.எஸ். (ஆனர்ஸ்) (4-YEAR B.S. (HONOURS) PROGRAMME IN MATHEMATICS)
கணிதம் மற்றும் கணினி அறிவியலில் 4 ஆண்டு பி.எஸ். (ஆனர்ஸ்) (4-YEAR B.S. (HONOURS) PROGRAMME IN MATHEMATICS AND COMPUTER SCIENCE)இந்த இரு படிப்புகளிலும் சேர்வதற்கு பிளஸ் டூ அல்லது அதற்கு இணையான தேர்வில் வெற்றி பெற்றிருக்க வேண்டும். இந்தியா முழுவதும் நடத்தப்படும் எழுத்து நுழைவுத் தேர்வில் வெற்றி பெற்றவர்கள் மட்டுமே இந்த படிப்பில் சேர்த்துக் கொள்ளப்படுவார்கள்.இருப்பினும் "தேசிய அறிவியல் ஒலிம்பியாட்"(NATIONAL SCIENCE OLYMPIADS) போட்டியில் மிகச்சிறந்த அளவு வெற்றி பெற்ற மாணவர்களுக்கு நுழைவு தேர்வு எழுதுவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட வாய்ப்பு உள்ளது.
மாணவர் சேர்க்கை பற்றிய அறிவிப்பினை www.cmi.ac.in/admissions.என்னும் இணையதளத்தின் மூலம் பெற்றுக் கொள்ளலாம்.
2. கணிதத்தில் 2 ஆண்டு எம்.எஸ்.சி. (2-YEAR M.SC. PROGRAMME IN MATHEMATICS)
கணிதத்தில் எம்.எஸ்.சி பட்டப்படிப்பு படிப்பதற்கு கணித பாடத்தை உள்ளடக்கிய பி .ஏ (B.A),பி.எஸ்சி (B.Sc ) , பி.மேக்ஸ் (B.Maths) ,பி. ஸ்டாடிஸ்டிக்ஸ் (B. Statistics) ,பி .இ (B.E.) ,பி.. டெக் (B.Tech )போன்ற இளங்கலை பட்டங்களை பெற்றவர்கள் தகுதி படைத்தவர்கள் ஆவார்கள்.இந்தியா முழுவதும் நடத்தப்படும் நுழைவுத் தேர்வில் பங்கு பெற்று அந்த தேர்வில் வெற்றி பெற்றவர்கள் மட்டுமே நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்படுவார்கள். நேர்முகத் தேர்வு சென்னையில் நடைபெறும்இந்தப் படிப்பு பற்றிய மேலும் பல விவரங்களை www.cmi.ac.in/admissions என்னும் இணையதளத்தில் பெற்றுக் கொள்ளலாம் .
3. கணினி அறிவியலில் 2 ஆண்டு எம்.எஸ்.சி.
(2-YEAR M.SC. PROGRAMME IN COMPUTER SCIENCE)
எம் எஸ் சி கணினி அறிவியல் படிப்பில் சேர்ந்து படிக்க விரும்புபவர்கள் கண்டிப்பாக கணினி அறிவியல் பின்னணியோடு பட்டப் படிப்பை முடித்திருக்க வேண்டும்.அதாவது, பி .ஏ (B.A),பி.எஸ்சி (B.Sc ) , பி.மேக்ஸ் (B.Maths) ,பி. ஸ்டாடிஸ்டிக்ஸ் (B. Statistics) ,பி .இ (B.E.) ,பி.. டெக் (B.Tech )போன்ற இளங்கலை போன்ற பட்டங்களை படிக்கும்போது கம்ப்யூட்டர் சயின்ஸ் பாடத்தையும் சேர்ந்து படித்திருக்க வேண்டியது அவசியம் ஆகும்.இந்தியா முழுவதும் நுழைவுத் தேர்வு நடத்தப்படும். இந்தப் படிப்பு பற்றிய மேலும் பல விவரங்களை www.cmi.ac.in/admissions என்னும் இணையதளத்தில் பெற்றுக் கொள்ளலாம் .
4. தரவு அறிவியலில் 2 ஆண்டு எம்.எஸ்.சி.
(2-YEAR M.SC. PROGRAMME IN DATA SCIENCE)
எம்எஸ்சி தரவு அறிவியல் (DATA SCIENCE) படிப்பில் சேர கணிதம் புள்ளியியல் அல்லது கணினி அறிவியல் ஆகிய துறைகளில் பின்னணியை கொண்டு பி .ஏ(B.A),பி.எஸ்சி (B.Sc ) , பி.மேக்ஸ் (B.Maths) ,பி. ஸ்டாடிஸ்டிக்ஸ் (B. Statistics) ,பி .இ (B.E.) ,பி.. டெக் (B.Tech )போன்ற இளங்கலை பட்டங்களை பெற்றிருக்க வேண்டும்.இந்தியா முழுவதும் நுழைவுத் தேர்வு நடத்தப்படும். இந்தப் படிப்பு பற்றிய மேலும் பல விவரங்களை www.cmi.ac.in/admissions என்னும் இணையதளத்தில் பெற்றுக் கொள்ளலாம் .
5. கணிதத்தில் முனைவர் பட்டம் (Ph.D.) (Ph.D. PROGRAMME IN MATHEMATICS) ,கணினி அறிவியலில் முனைவர் பட்டம் (Ph.D.) (Ph.D. PROGRAMME IN COMPUTER SCIENCE) இயற்பியலில் முனைவர் பட்டம் (Ph.D.) (Ph.D. PROGRAMME IN PHYSICS)கணிதம், அறிவியல், இயற்பியல் ஆகிய பாடங்களில் முனைவர் பட்ட படிப்புகளை (டாக்டர் பட்டம்) (Ph.D) படிக்க விரும்புபவர்கள் கீழ்கண்ட ஏதேனும் ஒரு கல்வி தகுதியை பெற்றிருக்க வேண்டும்.கணிதத்தில் டாக்டர் பட்டம் பெற கணித பாடத்தில் எம்எஸ்சி பட்டம் அல்லது அதற்கு இணையான பட்டம் பெற்றிருக்க வேண்டும். மேலும், பொறியியல் அல்லது அறிவியலில் இளங்கலை பட்டம் பெற்று, ஆராய்ச்சியில் மிகுந்த ஈடுபாடு மற்றும் திறன் கொண்டவர்களும் டாக்டர் பட்ட படிப்பில் சேர்ந்து படிக்கலாம்.கம்ப்யூட்டர் எனப்படும் கணினி அறிவியலில் டாக்டர் பட்டம் பெற விரும்புபவர்கள், பி.இ, பி.டெக், எம்.எஸ்சி, அல்லது எம். சி. ஏ பட்டம் பெற்றிருக்க வேண்டும். அறிவியலில் இளங்கலை பட்டம் பெற்று ஆராய்ச்சியில் மிகுந்த ஈடுபாடு கொண்டவர்களும் இந்த படிப்பில் சேர்ந்து படிக்கலாம்
இயற்பியல் முனைவர் பட்டம் பெற விரும்புபவர்கள், இயற்பியல் பாடத்தில் எம்எஸ்சி பட்டம் அல்லது அதற்கு இணையான பட்டம் பெற்றிருக்க வேண்டும்.டாக்டர் பட்ட படிப்புகளில் சேர்வதற்கு இந்தியா முழுவதும் நுழைவு தேர்வு நடத்தப்படும். எழுத்துப்பூர்வமான நுழைவுத் தேர்வில் வெற்றி பெற்றவர்கள் சென்னையில் நடைபெறும் நேர்காணலில் கலந்து கொள்ள வேண்டும்.நேர்காணலில் வெற்றி பெற்றவர்கள் மட்டுமே டாக்டர் பட்ட படிப்பில் சேர்த்துக் கொள்ளப்படுவார்கள் இந்தப் படிப்பு பற்றிய மேலும் பல விவரங்களை www.cmi.ac.in/admissions என்னும் இணையதளத்தில் பெற்றுக் கொள்ளலாம் .
இந்த கல்வி நிறுவனம் பல வெளிநாடுகளோடு முறையாக கற்பித்தல் மற்றும் ஆராய்ச்சிக்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு நடைமுறைப்படுத்தி வருகிறது.இந்த ஒப்பந்தத்தின்படி,,குறிப்பாக-பிரான்சின் பாரிஸில் உள்ள 'எகோல் நார்மல் சுப்பீரியர்' (Ecole Normale Supérieure) ,பிரான்சின் சாக்லேவில் (Saclay) அமைந்துள்ள 'எகோல் நார்மல் சுப்பீரியர் பாரிஸ்-சாக்லே' (Ecole Normale Supérieure Paris-Saclay)-ஆகிய நிறுவனங்களில் சென்று முறைப்படி ஆராய்ச்சிகளை மேற்கொள்ளவும், உலக அளவில் சிறந்த பயிற்சிகளில் பங்கு கொள்ளவும் வாய்ப்புகளை வழங்குகிறது
இந்த தேர்வு பற்றிய மேலும் பல விவரங்களுக்கு தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி
CHENNAI MATHEMATICAL INSTITUTE
H1, SIPCOT IT PARK,
SIRUSERI KELAMBAKKAM -603 103,
TAMILNADU, INDIA
Phone: (044) 7196 1000, (044) 2747 0226–0229,
Fax: (044) 2747 0225