கல்வி&வேலைவாய்ப்பு

என்ஜினீயரிங் முடித்தவர்களுக்கு அரசு துறைகளில் என்னென்ன வேலைவாய்ப்புகள் உள்ளன? முழு விவரம்

என்ஜினீயரிங் சர்வீசஸ் தேர்வு எழுதுபவர்களுக்கு 'எலெக்ட்ரானிக்ஸ் அன்ட் டெலி கம்யூனிகேஷன் என்ஜினீயரிங்' துறையில் வழங்கப்படும் பணிகள் பற்றியும், கல்வித்தகுதி, வயதுவரம்பு, தேர்வுக் கட்டணம், தேர்வுத் திட்டம் பற்றி விரிவாகப் பார்ப்போம்.

பொறியியல் துறை வேலைகள்

"என்ஜினீயரிங் சர்வீசஸ் தேர்வு" (Engineering Services Examination) எழுதி வெற்றி பெற்றவர்களுக்கு சிவில் என்ஜினீயரிங், மெக்கானிக்கல் என்ஜினீயரிங், எலெக்ட்ரிக்கல் என்ஜினீயரிங் துறைகளில் என்னென்ன பணிகள் வழங்கப்படுகின்றன? என்பதை தெளிவாக பார்த்தோம்.

இனி என்ஜினீயரிங் சர்வீசஸ் தேர்வு எழுதுபவர்களுக்கு 'எலெக்ட்ரானிக்ஸ் அன்ட் டெலி கம்யூனிகேஷன் என்ஜினீயரிங்' துறையில் வழங்கப்படும் பணிகள் பற்றியும், கல்வித்தகுதி, வயதுவரம்பு, தேர்வுக் கட்டணம், தேர்வுத் திட்டம் பற்றி விரிவாகப் பார்ப்போம்.

IV. பிரிவு - 4-எலெக்ட்ரானிக்ஸ் அன்ட் டெலி கம்யூனிகேஷன் என்ஜினீயரிங் பணிகள் (Electronics and Tele Communication Engineering)

இந்தப் பிரிவில் கீழ்க்கண்ட குரூப் A (Group A) மற்றும் குரூப் B (Group B) பணிகளில் வேலை வழங்கப்படும்.

(i) இந்தியன் இரயில்வே சர்வீஸ் ஆஃப் சிக்னல் என்ஜினீயரர்ஸ் (Indian Railway Service of Signal Engineers).

/(ii) இந்தியன் இரயில்வே ஸ்டோர்ஸ் சர்வீஸ் (டெலிகம்யூனிகேஷன் எலெக்ட்ரானிக்ஸ் என்ஜினீயரிங் பணிகள்) (Indian Railway Stores Service [Telecommunication / Electronics Engineering Posts]).

(iii) இந்தியன் இன்ஸ்பெக்ஷன் சர்வீஸ் [அசிஸ்டன்ட் டைரக்டர் கிரேடு-டு-I] (Indian Inspection Service [Asst. Dir. Grade-I])

(iv) இந்தியன் டெலிகம்யூனிகேஷன் சர்வீஸ் குரூப்-'A' (Indian Telecommunication Service, Group 'A').

(v) இந்தியன் ரேடியோ ஒழுங்குமுறைப் பணி குரூப்--'A' (Indian Radio Regulatory Service Gr. 'A')

(vi) இந்தியன் இராணுவ தளவாட தொழிற்சாலை பணி AWM/JTS (எலெக்ட்ரானிக்ஸ் அன்ட் டெலிகாம் என்ஜினீயரிங் பணிகள்) (Indian Ordnance Factories Service AWM/JTS [Electronics and Telecommunication Engineering Posts]).

(vii) இந்தியன் கப்பற்படை தளவாடப் பணி (Indian Naval Armament Service)

(viii) இளநிலை டெலிகாம் ஆபீசர் (ஜெனரல் சென்ட்ரல் சர்வீஸ் குரூப் 'B') (Junior Telecom Officer [General Central Service Group 'B', Gazetted, Non-Ministerial]).

(ix) சென்ட்ரல் பவர் என்ஜினீயரிங் சர்வீஸ் குரூப்-'B' (எலெக்ட்ரானிக்ஸ் அன்ட் டெலிகம்யூனிகேஷன் என்ஜினீயரிங் பணிகள்) (Central Power Engineering Service Group 'B' [Electronics and Telecommunication Engineering Posts]).

மேலே குறிப்பிட்ட பல்வேறு பணிகளுக்குத் தகுதியான நபர்களைத் தேர்ந்தெடுக்க "என்ஜினீயரிங் சர்வீசஸ் எக்ஸாமினேஷன்" (Engineering Services Examination)என்னும் போட்டித்தேர்வு நடத்தப்படுகிறது. ஆண்டுதோறும் சுமார் 650க்கும் மேற்பட்ட காலிப் பணியிடங்கள் இந்தப் பிரிவுகளில் உருவாகும் என்பதால் ஒவ்வொரு ஆண்டும் இந்தத் தேர்வு நடத்தப்படுகிறது.

கல்வித்தகுதி

இந்தப் போட்டித்தேர்வை எழுத பல்கலைக்கழகத்தால் அங்கீகரிக்கப்பட்ட பொறியியல் பட்டம்' (Engineering Degree) பெற்றவர்கள் எழுத தகுதியுடையவர்கள் ஆவார்கள்.

மேலும் “இன்ஸ்டிட்யூஷன்ஸ் ஆஃப் என்ஜினியர்ஸ்" (Institution of Engineers) என்னும் நிறுவனம் நடத்தும் தேர்வுகளான செக்சன் A மற்றும் B தேர்வுகளில் (Section A and Section B) வெற்றி பெற்றவர்களும் இந்தத் போட்டித் தேர்வை எழுதலாம்.

வெளிநாட்டுப் பல்கலைக்கழகம் (Foreign University) அல்லது கல்லூரிகளில் (Colleges) பொறியியல் பட்டப்படிப்பை முடித்தவர்களும் இந்தப் போட்டித்தேர்வை எழுத தகுதியுடையவர்கள் ஆவார்கள். இருப்பினும் இவர்கள்பெற்ற பொறியியல் பட்டத்தை இந்திய அரசு அங்கீகரிக்க வேண்டியது அவசியமாகும்.

"இன்ஸ்டிட்யூட் ஆஃப் எலெக்ட்ரானிக்ஸ் அன்ட் டெலி கம்யூனிகேஷன் என்ஜினீயரர்ஸ்" (Institute of Electronics and Telecommunication Engineers) என்னும் அமைப்பு நடத்தும் கிராஜுவேட் மெம்பர்ஷிப் எக்ஸாமினேஷன்" (Graduate Membership Examination) என்னும் தேர்வில் வெற்றிபெற்றவர்களும் இந்தப் போட்டித்தேர்வை எழுத தகுதி பெற்றவர்கள் ஆவார்கள்.

“ஏரோநாட்டிக்கல் சொசைட்டி ஆஃப் இந்தியா" (Aeronautical Society of India)என்னும் அமைப்பு நடத்தும் "அசோசியேட் மெம்பர்ஷிப் எக்ஸாமினேஷன்” (Associate Membership Examination) என்னும் தேர்வில் பகுதி II மற்றும் பகுதி III (Part II and Part III) செக்சன் A மற்றும் B (Section A and B) பிரிவுகளில் வெற்றி பெற்றவர்களும் இந்தத் தேர்வை எழுதலாம்.

மேலும் "இன்ஸ்டிட்யூஷன் ஆஃப் எலெக்ட்ரானிக்ஸ் அன்ட் «டியோ என்ஜினீயரர்ஸ் (லண்டன்)" (Institution of Electronics and Radio Engineers [London]) என்னும் அமைப்பு நடத்தும் "கிராஜுவேட் மெம்பர்ஷிப் எக்ஸாமினேஷன்" (Graduate Membership Examination) என்னும் தேர்விலும் வெற்றி பெற்றவர்கள் இந்தத் போட்டித் தேர்வை எழுத அனுமதிக்கப்படுவார்கள்.

எம்.எஸ்.சி., (M.Sc.) பட்டப்படிப்பில் வயர்லெஸ் கம்யூனிகேஷன் (Wireless Communication), L (Electronics), 4 A (Radio Physics), ரேடியோ என்ஜினீயரிங் (Radio Engineering) ஆகியவற்றை சிறப்புப் பாடமாக தேர்ந்தெடுத்து பட்டம் பெற்றவர்கள் கீழ்க்கண்ட பணிகளில் மட்டும் சேரத் தகுதி படைத்தவர்கள் ஆவார்கள்.

1. இந்தியன் கடற்படை தளவாடப் பணி (எலெக்ட்ரானிக்ஸ் என்ஜினீயரிங் ) (Indian Naval Armament Service [Electronics Engineering Posts])

2. என்ஜினீயரர் கிரேடு 'A' இன் வயர்லெஸ் பிளானிங் அன்ட் கோ-ஆர்டினேஷன் விங்க் மானிட்டரிங் ஆர்கனைசேஷன். (கம்யூனிகேஷன்ஸ் அன்ட் டெலிகம்யூனிகேஷன்ஸ்) :) (Engineer [GCS - Gr 'A'] in Wireless Planning and Co - ordination Wing // Monitoring Organisation. (M/o Communications and I.T. D/o Telecommunications)

வயது வரம்பு

"என்ஜினீயரிங் சர்வீசஸ் எக்ஸாமினேஷன்" (Engineering Services Examination) என்னும் போட்டித்தேர்வை பொதுவாக 21 வயதுமுதல் 30 வயதுவரை எழுதலாம். "ஓ.பி.சி." (OBC) என அழைக்கப்படும் பிற பிற்படுத்தப்பட்ட இனத்தைச் சேர்ந்தவர்கள் (Other Backward Class) அதிகபட்சமாக 33 வயதுவரை இந்தத் தேர்வை எழுதலாம். தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடி இனத்தைச் சேர்ந்தவர்கள் 35 வயதுவரை இந்தத் தேர்வை எழுதலாம். முன்னாள் ராணுவத்தினரும் 35 வயதுவரை இந்தத் தேர்வு எழுத அனுமதிக்கப்படுவார்கள்.

தேர்வுக் கட்டணம்

இந்தத் தேர்வை எழுதுவதற்கான தேர்வு கட்டணம் ரூபாய் 200/- ஆகும். இருப்பினும் மகளிர், தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடி இனத்தைச் சேர்ந்தவர்கள் (SC/ST) மற்றும் மாற்றுத் திறனாளிகள் ஆகியோர் இந்தத் தேர்வுக்கட்டணம் செலுத்த வேண்டிய அவசியமில்லை.

தேர்வு திட்டம்

என்ஜினீயரிங் சர்வீஸ் எக்ஸாமினேஷன் தேர்வு 2 நிலைகளைக் கொண்டதாகும். அவை

1. பகுதி-1- எழுத்துத்தேர்வு (Part-1-Written Test)

2. பகுதி ॥ - ஆளுமைத் தேர்வு (Part-II - Personality Test)

-ஆகியவை ஆகும்.

1. பகுதி 1 - எழுத்துத்தேர்வு (Part-1-Written Test)

பகுதி 1 எழுத்துத் தேர்வில் பிரிவு 1 (Section - 1) (Section-2)என இருபிரிவுகள் உள்ளன. 2

பிரிவு 1ல் கொள்குறிவகை வினா அமைப்பில் (Objective Type Questions) கேள்விகள் அமையும்.

பிரிவு-2ல் விரிவான விடைகளை எதிர்பார்க்கும் கேள்விகள் (Conventional விடைகள் Papers) இடம்பெறும். இந்தப் பிரிவில் இடம்பெறும் கேள்விகளுக்கு எழுதும்போது ஆங்கிலத்தில் மட்டுமே எழுத வேண்டும்.

இந்த இரண்டு பிரிவுகளிலும் அந்தந்த குறிப்பிட்ட பணிகளுக்குத் தேவையான வகையில் கேள்விகள் அமைக்கப்படும்.

2.பகுதி - ॥ - ஆளுமைத்தேர்வு (Part - II - Personality Test)

பகுதி 2 ஆளுமைத் தேர்வில் (Personality Test) போட்டியாளரின் தலைமைக்கான தகுதி (Capacity for Leadership), தன் ஊக்கம் (Initiatives), அறிவுசார்ந்த (Intellectual Curiosity), (Social Qualities) போன்றவைகள் மதிப்பீடு செய்யப்படும்.

இனி "என்ஜினீயரிங் சர்வீசஸ் தேர்வு' எழுத தேவையான எழுத்துத் தேர்வுக்கான பாடத்திட்டங்கள் பற்றியும், விண்ணப்பம் அனுப்புவது பற்றிய அனைத்து விவரங்களையும் அடுத்து பார்ப்போம்.

தொடரும்.

SCROLL FOR NEXT