பிளஸ் 2 படித்து முடித்த பின்பு மேற்படிப்புக்காக பல்வேறு நுழைவுத் தேர்வுகள் அகில இந்திய அளவில் நடத்தப்படுகின்றன. இந்த நுழைவு தேர்வு எழுதியவர்கள் மட்டுமே சில முக்கியமான மேற்படிப்புகளில் சேர்த்துக் கொள்ளப்படுகிறார்கள்
எனவே, பள்ளிகளில் படிக்கும்போதே மாணவ, மாணவிகள் இந்த மேற்படிப்புக்காக நடத்தப்படும் நுழைவு தேர்வுகள் பற்றிய விவரங்களை தெரிந்து கொண்டு, அதற்கான தயாரிப்புகளிலும் ஈடுபடுவது சிறந்ததாகும்.
பிளஸ் 2 தேர்வில் வெற்றிபெற்றவர்கள் பொறியியல், மருத்துவம், மேலாண்மை, கம்ப்யூட்டர், சட்டம் போன்ற பல பிரிவுகளில் நடத்தப்படும் படிப்புகளை பற்றி தெளிவாகப் புரிந்து கொண்டால் எந்த தேர்விலும் எழுதிலும் வெற்றி பெறலாம்.
மருத்துவப் படிப்பில் சேர விரும்புபவர்களுக்காக நடத்தப்படும் "நேஷனல் எலிஜிபிலிட்டி கம் என்ட்ரன்ஸ் எக்ஸாமினேஷன்" (NATIONAL ELIGIBILITY CUM ENTRANCE EXAMINATION) என அழைக்கப்படும் "நீட்"(NEET ) தேர்வு பற்றிய விவரங்களை பார்ப்போம்.
1. நேஷனல் எலிஜிபிலிட்டி கம் என்ட்ரன்ஸ் எக்ஸாமினேஷன் (NATIONAL ELIGIBILITY CUM ENTRANCE EXAMINATION) (NEET)
மருத்துவ படிப்புகளான -
1 எம்.பி.பி.எஸ் (M.B.B.S)
2. பி.டி.எஸ் (B.D.S.)
3. பி.ஏ.எம்.எஸ் (B.A.M.S.)
4.பி.யு.எம்.எஸ் (B.U.M.S) மற்றும்
5.பி.ஹெச்.எம்.எஸ்(B.H.M.S)
-ஆகிய படிப்புகளில் சேர விரும்புபவர்கள் எழுத வேண்டிய நுழைவு தேர்வு, “நீட்” எனப்படும் "நேஷனல் எலிஜிபிலிட்டி கம் என்ட்ரன்ஸ் எக்ஸாமினேஷன்" ஆகும்.
“நீட்” என்னும் நுழைவு தேர்வு என்.டி.ஏ (N.T.A) எனப்படும்" நேஷனல் டெஸ்டிங் ஏஜென்சி "(NATIONAL TESTING AGENCY) என்னும் அமைப்பால் நடத்தப்படுகிறது. மத்திய அரசின் கல்வித் துறையால் உருவாக்கப்பட்டுள்ள இந்த அமைப்பு, ,இந்தியா முழுவதும் உள்ள மருத்துவ கல்வி நிலையங்களில் மாணவர்களை சேர்ப்பதற்கு நுழைவு தேர்வு நடத்த அனுமதிக்கப்பட்டுள்ளது.
2020 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டு உள்ள "நேஷனல் கமிஷன் ஃபார் இந்தியன் சிஸ்டம் ஆப் மெடிசன் ஆக்ட்"(நேஷனல் COMMISSION FOR INDIAN SYSTEM OF MEDICINE ACT) என் சட்டத்தின் படி இந்த தேர்வு இந்தியா முழுவதும் நடத்தப்படுகிறது.
“நீட்” தேர்வு எழுத விரும்புபவர்கள் இணையதளம் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். தேர்வு பற்றிய விவரங்கள் பெற உதவும் இணையதள முகவரி: www.neet.nta.nic.in ஆகும்.
தேர்வு பற்றிய விவரம்
“நீட்” நுழைவு தேர்வில் இயற்பியல் (PHYSICS) வேதியியல் (CHEMISTRY), உயிரியல் (தாவரவியல் மற்றும் விலங்கியல்) (BIOLOGY (BOTANY AND ZOOLOGY) ஆகிய பாடங்களில் கேள்விகள் இடம்பெறும். கேள்விகள் கொள் குறி வக (MULTIPLE CHOICE QUESTIONS) அமைப்பில் அமைக்கப்பட்டிருக்கும்.
அதாவது ,ஒரு கேள்விக்கு நான்கு பதில்கள் கொடுக்கப்பட்டிருக்கும் . இந்த நான்கு பதில்களில் சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுத வேண்டும்.
இயற்பியலில் 45 கேள்விகள் இடம் பெறும். மொத்தம் 180 மதிப்பெண்கள் இயற்பியல் பாடத்திற்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இதேபோல் ,வேதியியல் பாடத்திலும் 45 கேள்விகள் இடம் பெறும் .180 மதிப்பெண்கள் வேதியியல் பாடத்திற்கு மட்டும் வழங்கப்படும்.
ஆனால் உயிரியல் பாடத்தில் 90 கேள்விகள் இடம்பெறும். மொத்தம் 360 மதிப்பெண்கள் உயிரியல் பாடத்திற்கு மட்டும் வழங்கப்படும்.
இயற்பியல் ,வேதியியல் உயிரியல் ஆகிய மூன்று பாடங்களிலும் சேர்த்து மொத்தம் 180 கேள்விகள் இடம் பெறும் .இவற்றிற்கான மொத்த மதிப்பெண்கள் 720 ஆகும்.மொத்தம் 3 மணி நேரம் இந்த தேர்வு நடைபெறும்.
சரியான விடை எழுதுபவர்களுக்கு ஒவ்வொரு விடைக்கும் நான்கு மதிப்பெண்கள் வழங்கப்படும். தவறான விடை அளித்தவர்களுக்கு ஒவ்வொரு தவறான விடைக்கும் ஒரு மதிப்பெண் குறைக்கப்படும். பதில் எழுதாத கேள்விகளுக்கு எந்த மதிப்பெண்களும் வழங்கப்பட மாட்டாது.
இந்தியா முழுவதும் ஒரே நாளில் இந்த தேர்வு நடத்தப்படுகிறது. இது எழுத்து தேர்வாக அமைகிறது. (அதாவது சரியான விடையை கொடுக்கப்பட்டுள்ள விடைத்தாளில் பேனா கொண்டு நிரப்ப வேண்டும்).
13 மொழிகளில் தேர்வு
இந்த தேர்வு ஆங்கிலம் (ENGLISH) ஹிந்தி (HINDI), அசாமி (ASSAMESE பெங்காலி, (BENGALI), குஜராத்தி (GUJARATI), மலையாளம், (MALAYALAM), கன்னடம் (KANNADA), மராத்தி ( MARATHI ), ஒடியா (ODIA) , தெலுங்கு (TELUGU), உருது ( URDU ), பஞ்சாபி (PANJABI) ஆகிய மொழிகளில் நடத்தப்பட்டாலும், தமிழ் (TAMIL) மொழியிலும் இந்த தேர்வு நடைபெறுவது குறிப்பிடத்தக்கதாகும்.
எனவே தமிழ் மீடியத்தில் படிக்கும் மாணவ மாணவிகள் இந்த தேர்வு பற்றி அச்சம் கொள்ள வேண்டிய தேவை இல்லை.தேர்வு எழுத விண்ணப்பம் அனுப்பும்போது எந்த மொழியில் எழுத வேண்டும் என்பதை தெளிவாக குறிப்பிட்டு எழுத வேண்டும்.
கேள்விகள் பொதுவாக ஆங்கிலத்தில் மட்டுமே இருக்கும். மாநில மொழிகளில் எழுத விரும்புவர்களுக்கு ஆங்கிலம் மற்றும் அவர்கள் குறிப்பிட்ட மொழிகளில் கேள்வித்தாள் வழங்கப்படும்.
குறிப்பாக, தமிழகத்தைச் சேர்ந்த மாணவ மாணவிகளுக்கு உதவும் வகையில் கேள்வித்தாள் ஆங்கிலம் மற்றும் தமிழ் மொழியில் வழங்கப்படும். ஆனால், விண்ணப்பம் அனுப்பும்போது, தமிழ் மொழியில் தேர்வு எழுத வேண்டும் என்பதை குறிப்பிட்டு விண்ணப்பிக்க வேண்டியது அவசியமாகும்.
தமிழ், ஆங்கிலம் ஹிந்தி ஆகிய மொழிகளில் தேர்வு எழுத விரும்புபவர்கள், தமிழ்நாடு, பாண்டிச்சேரி, அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள் ஆகிய இடங்களில் அமைக்கப்பட்டுள்ள தேர்வு மையங்களில் மட்டுமே தேர்வு எழுத இயலும்
தேர்வு எழுத தகுதி
பிளஸ் 2 தேர்வில் வெற்றி பெற்றவர்கள் இந்த தேர்வை எழுத தகுதி பெற்றவர்கள் ஆவார்கள். இருப்பினும், பிளஸ் 2 படிப்பவர்களும், தேர்வு முடிவுக்காக காத்திருப்பவர்களும் இந்த தேர்வு எழுத விண்ணப்பிக்கலாம்.
தேர்வுக்கான பதிவு கட்டணம் விவரம்
1. பொது பிரிவினருக்கு - 1700 ரூபாய்.
2. பொருளாதாரத்தில் நலிந்த பிரிவினர் பிற்பட்ட இனத்தைச் சேர்ந்தவர்கள் - 1600 ரூபாய்.
3. எஸ்சி., எஸ்டி., பி.டபிள்யூ.டி., மற்றும் திருநங்கைகள் - 1000 ரூபாய்
தேர்வு மையத்திற்கு தடை செய்யப்பட்ட பொருட்கள்
நீட் தேர்வு எழுதுபவர்கள் தேர்வு மையத்திற்கு கீழ்க்கண்ட பொருட்களை கண்டிப்பாக கொண்டு செல்வதை தவிர்க்க வேண்டும்
1. சின்னஞ்சிறு தாள்கள் ஜாமெட்டரிபாக்ஸ், பென்சில் பாக்ஸ் ,பிளாஸ்டிக் பவுச், கால்குலேட்டர் , பேனா , ஸ்கேல் ரைட்டிங் பேர்ட், பென்டிரைவ்(PENDRIVE), ரப்பர்(ERASER ), கால்குலேட்டர் லாக் டேபிள் (LOG TABLE), எலக்ட்ரானிக் பேனா, ஸ்கேனர்.
2. மொபைல் போன், ப்ளூடூத், இயர் போன் ( EARPHONE) , மைக்ரோஃபோன், பேஜர், ஹெல்த் பேண்ட் (HEALTH BAND).
3. வாலெட்(WALLET ),காகிள்ஸ்(GOGGLES),பைகள் , பெல்ட தொப்பி (CAP).
4. கைக்கடிகாரம் பிரேஸ்லெட் கேமரா.
5. நகைகள், உலோகப் பொருட்கள் (METALIC PRODUCTS).
6. உணவுப் பொருட்கள், தண்ணீர் பாட்டில்.
7. தகவல் தொடர்பு கருவிகள், மைக்ரோ சிப் (MICROCHIP), கேமரா ப்ளூடூத் தொடர்புடைய கருவிகள்.
குறிப்பு:
வழக்கமாக எல்லோராலும் ஏற்றுக் கொள்ளக் கூடிய ஆடைகளை அணிந்து வருவது அவசியம். குறிப்பிட்ட காலணிகள் (SHOES) அணிந்து வருவதை தவிர்க்க வேண்டும்.
மேலும் விவரங்களுக்கு…
NATIONAL TESTING AGENCY
FIRST FLOOR, NSIC-MDBP BUILDING,
OKHLA INDUSTRIAL ESTATE,
NEWDELHI-110 020.
Email: neet@nta.ac.in, www.nta.ac.in,
நீட் தேர்வு சம்பந்தப்பட்ட மேலும் விவரங்கள் தெரிந்துகொள்ள exams.nta.ac.in/NEET என்னும் இணையதளத்தில் தொடர்பு கொள்ளலாம்.