வாழ்க்கையை நிம்மதியாக வாழ்வதற்கு, அன்றாட வாழ்வில் ஒருசில விஷயங்களை முறையாக பின்பற்றினாலே போதுமானது. இந்த பழக்கவழக்கங்கள் உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் ஆரோக்கியத்தை தக்கவைக்கும்.
ஆனால், இன்றைய பரபரப்பான வாழ்க்கையில் பெரும்பாலானோர் தங்களை அறியாமலேயே ஆரோக்கியத்தை கெடுக்கும் சில பழக்கவழக்கங்களை பின்பற்றுகிறார்கள். இத்தகைய பழக்கவழக்கங்களையும், அவை உடல்நலனில் ஏற்படுத்தும் எதிர்மறை விளைவுகளையும் பார்ப்போம்.
| பழக்கங்கள் | உடல்நல பாதிப்புகள் |
|---|---|
| துரித உணவுகள் மற்றும் சர்க்கரை பானங்கள் | எடை அதிகரிப்பு- கொழுப்பு சேமிப்புக்கு வழிவகுக்கும். உடல் ஆற்றல் குறையும் |
| அதிக நேரம் செல்போன் பார்த்தல் | சோம்பல்-போதிய தூக்கமின்மை- அதிக மன அழுத்தம்- கண் சோர்வு உண்டாகும். |
| இரவு நீண்ட நேரம் கண் விழித்தல் | சோர்வு- கரு வளையங்கள்-ஹார்மோன் ஏற்றத்தாழ்வு- அதிக பசி உணர்வு |
| மன அழுத்தம் மற்றும் அதீத சிந்தனை | கவலை-வழக்கத்தை விட அதிகமாக சாப்பிடுதல்- தலைவலி, எரிச்சல் தலை தூக்கும். |
| உடல் உழைப்பு இல்லாமை | வளர்சிதை மாற்றம் மெதுவாக நடைபெறும்- கொழுப்பு அதிகரிக்கும்-உடல் ஆற்றல் குறையும். |
| இரவு உணவு தாமதம் | உடல் கொழுப்பு அதிகரிக்கும், செரிமானம் மெதுவாக நடக்கும், இரவு தூக்கம் பாதிக்கப்படும். |
| தண்ணீர் குறைவாக குடித்தல் | சருமம் உலர்ந்துவிடும், மூளையின் செயல்பாடு மந்தமாக வாய்ப்பு. |