பளபளப்பான கூந்தல் 
ஆரோக்யம்

பளபளப்பான கூந்தல் வேண்டுமா..? இந்த உணவுகள் நிச்சயம் கைகொடுக்கும்

முடியின் ஆரோக்கியத்தை பாதுகாக்க ஆரஞ்சு, பப்பாளி, கிவி ஆகிய பழங்களை உட்கொள்ளலாம்.

பெண்களின் அழகிற்கு அழகு சேர்ப்பது அவர்களின் கூந்தல்தான். கூந்தல் அடர்த்தியாகவும், வலிமையாகவும் பளபளப்பாகவும் இருப்பதையே பெண்கள் விரும்புவார்கள். இதற்கு சத்தான உணவுகள் அவசியம் தேவை. முடி உதிர்வு பிரச்சினையை எதிர்கொள்பவர்கள், சத்தான உணவுகளுடன் ஒரு சில பழக்கவழக்கங்களை பின்பற்றுவதன் மூலம் இயற்கையாகவே முடி வளர்ச்சியை அதிகரிக்கச் செய்யலாம்.

பளபளப்பான மற்றும் வலிமையான கூந்தலுக்கு தேவையான அத்தியாவசிய ஊட்டச்சத்துகள் மற்றும் அந்த ஊட்டச்சத்துகள் அடங்கிய உணவுகளை பார்ப்போம்.

ஊட்டச்சத்துபலன்கள்உணவுகள்
பயோட்டீன்கூந்தலை வலிமைப்படுத்த உதவும்முட்டை பாதாம் சர்க்கரைவள்ளிக் கிழங்கு.
ஒமேகா-3உச்சந்தலை ஆரோக்கியம்- கூந்தல் பளபளப்புசியா விதைகள் ஆளி விதைகள் சால்மன் மீன்கள்
வைட்டமின் சிகொலாஜனை மேம்படுத்தும். முடியின் ஆரோக்கியத்தை காக்கும்.ஆரஞ்சு பப்பாளி கிவி பழங்கள்
வைட்டமின் ஈமுடி உதிர்வு குறையும்- முடி பளபளப்பாகும்.கறிவேப்பிலை
இரும்புச்சத்துமயிர்க்கால்களுக்கு ஆக்சிஜன் தடையின்றி செல்ல உதவும்கீரை பீன்ஸ் மற்றும் பருப்பு வகைகள்
துத்தநாகம்முடி வளர்ச்சி- முடியில் ஏற்படும் சேதத்தை சீர் செய்யும்பூசணி விதைகள்