துவைக்காத சாக்ஸ்களை மீண்டும் மீண்டும் பயன்படுத்துவது மற்றும் வியர்வை நிறைந்த சாக்ஸ்களை அணிந்தபடி நீண்ட நேரம் உடற்பயிற்சி செய்வது, ‘அத்லட்ஸ் ஃபுட்’ (Athlete's Foot) எனப்படும் பூஞ்சை தொற்று ஏற்படும் அபாயத்தை அதிகரிக்கிறது.
ஈரப்பதம் மற்றும் வெப்பம் அதிகமாக இருக்கும் சூழலில் இந்த பூஞ்சை வேகமாக வளர்கிறது. முதலில் கால் விரல்களின் இடுக்குகளில் தொடங்கும் இந்த தொற்று, பின்னர் பாதத்தின் பிற பகுதிகளுக்கும் பரவக்கூடும்.
கால் விரல்களுக்கு இடையில் அரிப்பு
எரிச்சல் மற்றும் சிவத்தல்
தோல் உரிதல் அல்லது வெடிப்பு
வீக்கம் மற்றும் துர்நாற்றம்
தினமும் மாற்றவும்: ஒருமுறை பயன்படுத்திய சாக்ஸ்களை துவைக்காமல் மீண்டும் அணியக் கூடாது.
சுய சுத்தம்: கால்களை தினமும் சோப்பு போட்டு நன்றாகக் கழுவி, விரல்களுக்கு இடையே உள்ள பகுதியை உலர வைக்க வேண்டும்.
பருத்தி சாக்ஸ்கள்: 100% பருத்தி (Cotton) சாக்ஸ்களை பயன்படுத்தவும். இவை வியர்வையை நன்றாக உறிஞ்சும்.
காலணிகளை உலர வைக்கவும்: ஒரே ஷூவை தினமும் அணியாமல், மாற்றி மாற்றி அணிந்து அவற்றுக்குக் காற்றோட்டம் கொடுக்க வேண்டும்.
இந்த எளிய பழக்கவழக்கங்களைப் பின்பற்றுவதன் மூலம் ‘அத்லட்ஸ் ஃபுட்’ போன்ற பூஞ்சை தொற்றுகளிலிருந்து கால்களை பாதுகாக்கலாம்.