சினிமா துளிகள்

நான் அதிகமாக கமர்ஷியல் படங்கள் செய்வதில்லை - நடிகர் விஜய் சேதுபதி

விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'டிஎஸ்பி'. இப்படம் வருகிற டிசம்பர் 2-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

விஜய் சேதுபதி நடிக்கும் 46-வது திரைப்படத்தை இயக்குனர் பொன்ராம் இயக்கி வருகிறார். இந்த படத்தில் விஜய் சேதுபதி போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார். இப்படத்திற்கு 'டிஎஸ்பி' என்று பெயரிடப்பட்டுள்ளது. இதில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக அனு கீர்த்திவாஸ் நடித்துள்ளார்.

மேலும் பிரபாகர், புகழ், இளவரசு, ஞானசம்மந்தன், தீபா, சிங்கம்புலி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இசையமைப்பாளர் டி.இமான் இசையமைக்க, வெங்கடேஷ், தினேஷ் கிருஷ்ணன் ஒளிப்பதிவு செய்துள்ளனர். சமீபத்தில் இந்த படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியாகி வைரலானது. இப்படம் வருகிற டிசம்பர் 2-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

இதையடுத்து 'டிஎஸ்பி' திரைப்படத்தின் டிரைலர் மற்றும் இசைவெளியீட்டு விழாவில் நடிகர் விஜய் சேதுபதி பேசியதாவது, "நான் கமர்ஷியல் படங்கள் அதிகமாக செய்வதில்லை. இயக்குனர் பொன்ராமுடன் படம் செய்வேன் என நினைக்கவில்லை. ஆனால் அவர் சொன்ன கதை என்னை ஈர்த்தது. என்னை முழுதாக இப்படத்தில் மாற்றிவிட்டார். இந்த படத்தில் நடித்தது எனக்கு புது அனுபவமாக இருந்தது.

கமல்ஹாசன் அவர்கள் இங்கு வருவார் என எதிர்பார்க்கவில்லை. அவர் இங்கு வந்து வாழ்த்துவது மகிழ்ச்சி. சினிமாவில் எதை புதுமையாக செய்ய நினைத்தாலும் அதற்கு பெரிய ஊக்கமாக நீங்கள் இருக்கிறீர்கள். நீங்கள் செய்த சாதனைகள் இன்னும் பல தலைமுறைகள் கடந்தும் பேசப்படும். சினிமாவில் சாதிக்க பலருக்கும் ஊக்கமாக இருக்கும் உங்களுக்கு எங்களின் நன்றி" என்று பேசினார்.

SCROLL FOR NEXT