புதுச்சேரி

கேரள வாலிபர் கைது

மோட்டார் சைக்கிள் திருடிய கேரள வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

புதுச்சேரி

புதுச்சேரி பெரியகடை போலீஸ் இன்ஸ்பெக்டர் கண்ணன் தலைமையில் போலீசார் 45 அடி ரோட்டில் நேற்று வாகன சோதனையில் ஈடுபட்டனர். அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபரை பிடித்து விசாரணை நடத்தினர். அப்போது அவர் ஓட்டி வந்த வாகனம் திருட்டு மோட்டார் சைக்கிள் என்பது தெரியவந்தது.

விசாரணையில் அவர், கேரள மாநிலம் எர்ணாகுளம் பகுதியை சேர்ந்த சவுகாத் (வயது 23) என்பதும், ஆம்பூர் சாலையில் சாவியுடன் நின்று கொண்டிருந்த மோட்டார் சைக்கிளை திருடி வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். மோட்டார் சைக்கிளையும் பறிமுதல் செய்தனர்.

SCROLL FOR NEXT