மும்பை

சூதாட்ட விளையாட்டுகளை மராட்டிய அரசு ஊக்குவிக்க வேண்டும்- நவநிர்மாண் சேனா வலியுறுத்தல்

பிற்போக்கு கண்ணோட்டத்தை மாற்றி சூதாட்ட விளையாட்டுகளை மராட்டிய அரசு ஊக்குவிக்க வேண்டும் என்று நவநிர்மாண் சேனா கட்சி கூறியுள்ளது.

மும்பை, 

பிற்போக்கு கண்ணோட்டத்தை மாற்றி சூதாட்ட விளையாட்டுகளை மராட்டிய அரசு ஊக்குவிக்க வேண்டும் என்று நவநிர்மாண் சேனா கட்சி கூறியுள்ளது.

கேசினா சட்டம்

நவநிர்மாண் சேனா கட்சியின் தொழிலாளர் பிரிவு மாநில தலைவர் மனோஜ் சவான் முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டேக்கு எழுதி உள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:-

மராட்டியம் மிகவும் முற்போக்கான எண்ணங்களுக்கு பெயர் பெற்றது. தொழில் மயமாக்கப்பட்ட மாநிலமாகும். ஆனால் கேசினோ கேமிங் என அழைக்கப்படும் சூதாட்ட விளையாட்டை அனுமதிப்பதில் பிற்போக்கு கண்ணோட்டத்துடன் செயல்பட்டு வருகிறது.

மராட்டிய கேசினோ கட்டுப்பாடு மற்றும் வரி சட்டம் 1976-ம் ஆண்டு மாநில சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. ஆனால் இதுவரை நிறைவேற்றப்பட்டாமல் கிடப்பில் போடப்பட்டு உள்ளது. இதுகுறித்து முதல்-மந்திரி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

போழுதுபோக்கு

மும்பை ஐகோர்ட்டு மராட்டியத்தில் சூதாட்ட விடுதிகளை தொடங்குவதற்கு ஆதரவான மனுக்கள் குறித்து 6 மாதங்களுக்குள் முடிவு எடுக்கமாறு கடந்த 1995-ம் ஆண்டு அக்டோபர் 9-ந் தேதி அன்று உத்தரவிட்டது. இருப்பினும் அது குறித்து இன்னும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

அண்டை மாநிலமான கோவாவில் கடல் மற்றும் கரையோரத்தில் சூதாட்ட விடுதிகள் செயல்படுகின்றன. சிக்கிம் மாநிலமும் ஐந்து நட்சத்திர ஓட்டல்களில் சூதாட்ட விளையாட்டுகளை நடத்துவதற்கான கொள்கையை கொண்டுள்ளது. கேசினோ கேம்கள் ஒரு பொழுதுபோக்காக தான் கருதப்படுகின்றன, இது உள்ளூர் வேலைவாய்ப்பு, சுற்றுலாத் துறைகளை மேம்படுத்துகிறது. இது இயற்கையாகவே வருவாய் வளர்ச்சிக்கு உந்துதலை கொடுக்கும்.

இவ்வாறு அவர் கூறினார். 

SCROLL FOR NEXT