மும்பை

ரூ.8¼ கோடி வெளிநாட்டு கரன்சிகள் கடத்தி வந்தவர் கைது

மும்பை விமான நிலையத்தில் ரூ.8.36 கோடி வெளிநாட்டு கரன்சிகள் கடத்தி வந்தவரை போலீசார் கைது செய்தனர்.

மும்பை, 

மும்பை விமான நிலையத்தில் ரூ.8.36 கோடி வெளிநாட்டு கரன்சிகள் கடத்தி வந்தவரை போலீசார் கைது செய்தனர்.

சோதனை

மும்பை சர்வதேச விமான நிலையத்தில் கடந்த 20-ந்தேதி இரவு வெளிநாட்டில் இருந்து வந்த விமானம் ஒன்று தரை இறங்கியது. இந்த விமானத்தில் வந்த பயணிகளிடம் அதிகாரிகள் சோதனை நடத்தினர். அப்போது அமெரிக்காவில் வசிக்கும் இந்திய வம்சாவளியை சேர்ந்த பயணியின் நடவடிக்கையில் அங்கிருந்த மத்திய தொழிற்பாதுகாப்பு படையினருக்கு சந்தேகம் ஏற்பட்டது.

அவரை வழிமறித்து உடைமைகளை கைப்பற்றி சோதனை போட்டனர்.

வெளிநாட்டு கரன்சிகள் பறிமுதல்

இச்சோதனையில் அவர் மறைத்து வைத்திருந்த வெளிநாட்டு கரன்சி நோட்டுகள் கத்தை கத்தையாக இருந்ததை பறிமுதல் செய்தனர். இவற்றின் மொத்த மதிப்பு ரூ.8 கோடியே 36 லட்சம் ஆகும். இது பற்றி சுங்கவரித்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அதிகாரிகள் அங்கு சென்று வெளிநாட்டு கரன்சி நோட்டுகளை பறிமுதல் செய்தனர். பின்னர் அப்பயணியை போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் அவரை கைது செய்தனர்.

இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து வெளிநாட்டு கரன்சி கடத்தல் தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

SCROLL FOR NEXT