மும்பை,
மும்பை பங்குச்சந்தையான சென்செக்ஸ் 3,600 புள்ளிகளுக்கு மேல் உயர்ந்து 85 ஆயிரம் புள்ளிகளை கடந்தது. தேசிய பங்குச்சந்தையான நிப்டி 1,200 புள்ளிகளுக்கு மேல் உயர்ந்து 28 ஆயிரம் புள்ளிகளில் வர்த்தகம் ஆகிறது.
இந்திய பொருட்களுக்கான வரியை 18 சதவீதமாக குறைப்பதாக அமெரிக்கா அறிவித்ததன் எதிரொலியாக இந்திய பங்குச்சந்தைகள் உயர்ந்துள்ளது.
மத்திய அரசு வெளியிட்டுள்ள பொருளாதார ஆய்வறிக்கையில் 2026-27 நிதியாண்டில் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி 6.8 முதல் 7.2 சதவீதம் வரை இருக்கும் என்று கணித்துள்ளது. மேலும் 2026 நிதியாண்டில் 4.4 சதவீத நிதிப் பற்றாக்குறை இலக்கை எட்டுவதற்கான பாதையில் இந்தியா உள்ளது என்று கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.