பெங்களூரு

உப்பள்ளி அருகே மட்கா சூதாட்டம்; 2 பேர் சிக்கினர்

உப்பள்ளி அருகே மட்கா சூதாட்டத்தில் ஈடுபட்ட 2 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

உப்பள்ளி:

தார்வார் மாவட்டம் உப்பள்ளி அருகே மட்கா சூதாட்டம் நடப்பதாக உப்பள்ளி டவுன் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அந்த தகவலின் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சோதனை செய்தனர். அப்போது அங்கு சூதாட்டத்தில் ஈடுபட்டதாக 2 பேரை பிடித்து விசாரித்தனர்.

விசாரணையில், அவர்கள் அதே பகுதியை சேர்ந்த மோகன் (வயது 32), பிரமோத் (35) ஆகியோர் என்பது தெரியவந்தது. மேலும், அவர்கள் அங்கு சூதாட்டத்தில் ஈடுபட்டது உறுதியானது. இதையடுத்து, அவர்களை கைது செய்த போலீசார், அவர்களிடம் இருந்து ரூ.12 ஆயிரம் ரொக்கத்தை பறிமுதல் செய்தனர். அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து டவுன் போலீசார் விசாரித்து வருகின்றனர்.