செய்திகள்

டெல்லியில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 97 ஆயிரத்தை கடந்தது: சுகாதாரத்துறை தகவல்

டெல்லியில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 97 ஆயிரத்தை கடந்துள்ளதாக, அம்மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

புதுடெல்லி,

இந்தியாவில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நாட்டில் கொரோனா பாதிப்புகளில் மராட்டியம் முதலிடத்தில் உள்ளது. இரண்டாவது இடத்தில் தமிழகம் உள்ளது. அதைத்தொடர்ந்து மூன்றாவது இடத்தில் தலைநகர் டெல்லி உள்ளது.

இந்நிலையில் டெல்லியில் இன்று மேலும் 2,505 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் மொத்த பாதிப்பு 97,200 ஆக உயர்ந்து உள்ளது. டெல்லியில் இன்று ஒரே நாளில் 55 பேர் கொரோனா பாதிப்புக்கு உயிரிழந்து உள்ளனர். இதனால் மொத்த பலி எண்ணிக்கை 3,004 ஆக உயர்ந்துள்ளதாக அம்மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

இன்று ஒரே நாளில் 2,632 பேர் அங்கு டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதனால் குணமடைந்தோர் எண்ணிக்கை 68 ஆயிரத்து 256 ஆக உள்ளது. மேலும் 25,940 பேர் தொடர்ந்து சிகிச்சை பெற்றும் வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.